பேட்டிங்கில் விராட் கோலி கே.எல்.ராகுலை தாண்டிய முகமது சமி!!!

0
597
Shami

பார்டர் கவாஸ்கர் டிராஃபியில் விளையாட ஆஸ்திரேலியா இங்கு கிளம்ப ஆரம்பித்த பொழுதே, இந்தத் தொடரை சுற்றி நிறைய விவாதங்களும், குற்றச்சாட்டுகளும் எழ ஆரம்பித்துவிட்டது!

ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஹீலி இந்திய ஆடுகளங்கள் மோசடியாக அமைக்கப்படும் ஏமாற்றுவதுதான் அவர்களின் வேலை என்றெல்லாம் கடுமையாக பேச ஆரம்பித்திருந்தார்!

- Advertisement -

இதற்கு அடுத்து போட்டிக்கு ஒரு நாள் முன்பாக ஆடுகளத்தின் புகைப்படங்கள் வெளியாக, ஆஸ்திரேலிய இடது கை பேட்ஸ்மேன்களை குறிவைத்து ஆடுகளத்தின் இரண்டு பக்கத்திலும் தனிப்பட்ட தயாரிப்புகள் நடப்பதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் கில்லஸ்பி கூறியதோடு ஐசிசி இதில் தலையிட வேண்டும் என்கிற அளவுக்குப் போனார்.

இதையெல்லாம் தாண்டி இரண்டு நாட்களுக்கு முன்பு ஆரம்பித்த தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 177 ரன்களுக்கு சுருண்டது. அதை நியாயப்படுத்த இரண்டாவது இன்னிங்ஸில் 91 ரன்களுக்கு சுருண்டுவிட்டது. இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மட்டும் விளையாடி நானுறு ரன்கள் எடுக்க, 132 ரன் மற்றும் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றது!

இந்திய அணி பேட்டிங் செய்யும்பொழுது ஒன்பதாவது விக்கட்டுக்கு வந்த முகமது சமி அதிரடியாக 47 பந்துக்கு இரண்டு பவுண்டரிகள் மூன்று சிக்ஸர்கள் விளாசி 37 ரன்கள் எடுத்தது இந்திய அணி 400 ரன்கள் எட்ட உதவியாக அமைந்தது.

- Advertisement -

இந்தப் போட்டியில் மூன்று சிக்ஸர்கள் விளாசியதின் மூலம் முகமது சமி விராட் கோலி, யுவராஜ் சிங் , கே எல் ராகுல் ஆகியோரை தாண்டி டெஸ்ட் போட்டியில் அதிக சிக்சர் அடித்தவர்கள் பட்டியலுக்கு சென்றுள்ளது சுவாரசிய சம்பவமாக அமைந்துள்ளது.

முகமது சமி – 25
விராட் கோலி – 24
யுவராஜ் சிங் – 21
கே எல் ராகுல் – 17