இங்கிலாந்தில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் கவுன்டி தொடரில் புஜாரா நான்கு போட்டிகளில் 217 ரன்கள் குவித்துள்ளார். கவுண்டி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. புஜாராவின் பேட்டிங் ஆவெரேஜ் 143.4 ஆக உள்ளது. அதில் நான்கு சதங்கள், மூன்று 150, 2 இரட்டை சதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் புஜாரா தற்பொழுது சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். அந்த அணியில் பாகிஸ்தான் அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரரான முகமது ரிஸ்வானும் இவருடன் இணைந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்.
துர்ஹாம் அணிக்கு எதிராக இவர்கள் இருவரும் இணைந்து 154 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இப்போட்டியில் புஜாரா 203 ரன்கள் குவித்தார் மறுபக்கம் ரிஸ்வான் 79 ரன்கள் குவித்தார். இந்தப் போட்டிக்கு முன்பு வரை முஹம்மது ரிஸ்வான் 3 இன்னிங்ஸ்களில் மொத்தமாகவே 26 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார்.
புஜாரா எனக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார்
புஜாரா தனக்கு சிறந்த ஆலோசனைகளை வழங்கியதாக முஹம்மது ரிஸ்வான் தற்பொழுது கூறியுள்ளார். துர்ஹாம் அணிக்கு எதிரான 2வது இன்னிங்சுக்கு முன்பு வரை வந்த வேகத்தில் நான் அவுட்டாகி கொண்டிருந்தேன். அவரிடம் இது சம்பந்தமாகப் பேச முயற்சி செய்தேன்.
அவர் வலைபயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கையில் அவரிடம் சென்று, இது சம்பந்தமாக பேசினேன்.
“எப்பொழுதும் நீங்கள் உங்களுடைய உடலுக்கு பக்கமாக வரும் பந்துக்கு மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். ஆசியாவில் டிரைவ் அடிப்பது போன்று இங்கே அடிக்க வேண்டிய அவசியம் இல்லை. இங்கே உள்ள மைதானத்தில் பந்துகள் நல்ல சீம் மற்றும் ஸ்விங் ஆகும். எனவே உடலை விட்டு தள்ளி செல்லும் பந்துகளை தேவையின்றி அடிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று”, புஜாரா எனக்கு ஆலோசனை வழங்கினார்.
அவருடைய ஆலோசனை எனக்கு கை கொடுத்தது என்னால் இரண்டாவது இன்னிங்சில் நன்றாக விளையாடவும் முடிந்தது என்று முஹம்மது ரிஸ்வான் கூறியுள்ளார்.அவரது செறிவு மற்றும் கவன நிலை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஒரு வீரரிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்றால், அதை இவரிடம் இருந்துதான் கற்றுக்கொள்ளவேண்டும் என்று பெருமையாக கூறியுள்ளார்.