உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. ரிஷப் பண்ட் அதிரடி சாதனையை முறியடித்த பாக் ரிஸ்வான்.. ஆஸியில் மாறுமா?

0
25
Rishabh

பாகிஸ்தான் பங்களாதேஷ் அணிகள் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தற்போது முதல் போட்டியில் விளையாடிக் கொண்டு வருகின்றன. இந்த போட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக செய்திருந்த சாதனையை முகமது ரிஸ்வான் முறியடித்து இருக்கிறார்.

நேற்று முன்தினம் துவங்கிய முதல் டெஸ்ட் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 448 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியின் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் முகமது ரிஸ்வான் 171 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருந்தார்.

- Advertisement -

கில்லஸ்பி எடுத்த அதிரடி முடிவு

டெஸ்ட் கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பராக முகமது ரிஸ்வான் சரியாக செயல்படாத காரணத்தினால் மீண்டும் அனுபவ விக்கெட் கீப்பர் முன்னாள் கேப்டன் சர்ப்ராஸ் அகமதுக்கு டெஸ்ட் அணியில் மற்றும் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கொடுக்கப்பட்டு வந்தது. மேலும் உள்நாட்டில் டெஸ்ட் தொடர் நடப்பதால் எதற்குப் பிறகு யார் இடம் பெறுவார்கள்? என்கின்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி அதிரடியாக பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முகமது ரிஸ்வானை களம் இறக்கினார். மேலும் 16 ரன்களுக்கு மூன்று முக்கிய விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான் அணிக்கு தனியாளாக 171 ரன்கள் குவித்து முகமது ரிஸ்வான் தனது தேர்வை நியாயப்படுத்தி விட்டார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் சாதனை முறியடிப்பு

பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த விக்கெட் கீப்பர் பட்டியலில் தற்போது முகமது ரிஸ்வான் மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறார். இன்னிங்ஸ் டிக்ளர் செய்யாமல் இருந்திருந்தால் அவர் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர்களில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்தவராக டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்திருக்க முடியும்.

இருந்த போதும் கூட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இதுவரையில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த
விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக இருந்து வந்த ரிஷப் பண்ட் சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்திருக்கிறார். இந்திய அணி 5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. ரிஷப் பண்ட் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக விளையாடக் கூடியவர் என்பதால், அங்கு இந்த சாதனையை அவர் மீண்டும் முறியடிக்க வாய்ப்புகள் உண்டு.

இதையும் படிங்க :

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர்களில் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக ஒரு இன்னிங்ஸில் அதிக ரன் எடுத்த வீரர்கள்:

முகமது ரிஸ்வான் – 171* – பங்களாதேஷ் – 2024
ரிஷப் பண்ட் – 146 – இங்கிலாந்து – 2022
குயிண்டன் டி காக் – 141* – வெஸ்ட் இண்டீஸ் – 2021
லிட்டன் தாஸ் – 141 – இலங்கை – 2022

- Advertisement -