இந்திய கிரிக்கெட்

விராட் கோலி இன்னும் 6 வருஷம் ஆடுவார்.. இந்த 4 விஷயத்தை நோட் பண்ணி பாருங்க புரியும் – முகமது கைஃப் பேச்சு

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இதே போல பேட்டிங் செய்து வந்தால் இன்னும் ஆறு வருடத்திற்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியும் என இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது விராட் கோலியின் பேட்டிங் ஃபார்ம் மிகவும் அபாரமாக இருந்து வருகிறது. உள்நாட்டு கிரிக்கெட் உடன் சேர்த்து கடைசி 7 போட்டிகளில் அவர் மொத்தம் மூன்று சதங்கள் மற்றும் நான்கு அரை சதங்கள் அடித்திருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் இரண்டு போட்டிகளில் டக் அவுட் ஆனதற்கு பிறகு அவரது பேட்டிங் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது.

விராட் கோலி என்ன செய்கிறார்?

தற்போது விராட் கோலி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு ஆரம்பத்தில் பந்துகளை எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு பதிலாக உள்ளே வந்ததிலிருந்து அதிரடியாக விளையாட ஆரம்பிக்கிறார். ஆனால் ஆபத்தான முறையில் விளையாடுவதில்லை. அவருடைய ஷாட் அனைத்தும் மிகவும் துல்லியமாக இருக்கிறது.

நேற்று அவர் உள்ளே வந்த முதல் 20 பந்துகளில் மட்டும் மொத்தம் ஆறு பவுண்டரிகள் அடித்திருந்தார். உள்ளே வந்ததும் தாக்கி விளையாடிவிட்டு திடீரென மெதுவாக விளையாட ஆரம்பித்து விடுகிறார். மிடில் ஓவர்களில் சிங்கிள் மற்றும் டபுள் எடுத்து பார்ட்னர்ஷிப்பை அழகாக உருவாக்குகிறார். இதன் காரணமாக ஒருபுறம் ரன் வருகிறது இன்னொரு புறம் அவர் விக்கட்டையும் இழப்பதில்லை. இது புது விராட் கோலி அணுகுமுறையாக இருக்கிறது.

- Advertisement -

ஆறு வருடங்கள் விளையாடலாம்

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் விராட் கோலி இன்னும் ஆறு வருடங்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாட முடியும் என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க: ஐசிசி அமைப்பு தேவையில்லை.. அது முழுக்க இந்தியர்கள் கட்டுப்பாட்டில் இருக்கு.. அதை ஏத்துக்க முடியாது – சயித் அஜ்மல் கருத்து

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “விராட் கோலி டெல்லி லோக்கல் லீக்கில் விளையாடுவது போல ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறார். நிதானமாக தெரிகிறார்; நண்பர்களுடன் மகிழ்ச்சியாக பேசுகிறார். எப்போதும் புன்னகையுடனும் காணப்படுகிறார். ஆனால் பந்துவீச்சாளர்களை கடுமையாக பார்க்கிறார். அதிரடியாக விளையாடுகிறார். ஆனால் பொறுமையாகவும் இருக்கிறார். அவர் இப்படியே இதே உத்வேகத்துடன் இருந்தால் இந்திய அணிக்காக இன்னும் ஆறு ஆண்டுகள் விளையாட முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts