நமன் திர் போன மேட்ச்ல காட்டுன இந்த புத்திசாலித்தனம் செம்ம.. அவரை விடாம யூஸ் பண்ணிக்கோங்க – கைப் அறிவுரை

0
10

​இந்திய மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டிக்கு முன்னதாக, புதுமுக வீரர் நமன் திர் குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் மிக முக்கியமான கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். முதல் டி20 போட்டியில் அறிமுகமான நமன் திர், நான்கு ஓவர்கள் பௌலிங் செய்து 31 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

​அதே போட்டியில் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 43 பந்துகளில் 102 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் அணி வெற்றி பெற வழிவகுத்தார். இளமை மற்றும் அனுபவம் நிறைந்த இந்த இந்திய அணியின் சிறந்த செயல்பாடு அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கையை அளித்துள்ளது.

- Advertisement -

​நமன் திர் பௌலிங் திறமை குறித்து முகமது கைஃப் பேசும்போது “நமன் அடிப்படையில் ஒரு பேட்டர். அதனால் அவர் பௌலிங் செய்யும்போது, ஒரு பேட்டர் மனநிலையிலேயே யோசிக்கிறார். இதை நான் கவனித்தேன். ரொமாரியோ சிஃபெர்ட் அவருக்கு சிக்ஸர் அடித்த பிறகு, அவர் வைட் லைனில் பௌலிங் செய்து அவரை அவுட் ஆக்கினார். இது பௌலிங் செய்யும்போது அவருக்கு இருக்கும் அட்வாண்டேஜ் ஆகும். அவர் ஒரு பார்ட் டைமர் என்றாலும், ஒரு நல்ல பௌலராக உருவெடுக்கும் ஆற்றல் தன்னிடம் இருப்பதை அவர் காட்டியுள்ளார். அவர் தனது வேகத்தையும் மாற்றி பௌலிங் செய்கிறார். நான் பார்த்த வரையில் அவரிடம் சிறந்த தகுதியும் திறமையும் இருப்பதாக உணர்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.

​மேலும் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் குறித்து பேசிய முகமது கைஃப் “நான் ஷ்ரேயாஸ் ஐயரின் பேட்டிங்கிற்கு பெரிய ரசிகன். பிரஷர் இருக்கும்போது அவரது பேட்டிங் பாதிக்கப்படுவதில்லை என்பதை நான் கவனித்திருக்கிறேன். இது மிகப்பெரிய விஷயம். கடந்த சில இன்னிங்ஸ்களில் அவர் பெரிய ரன்கள் அடிக்காததால் அதிக பிரஷர் இருந்தது, அதன்பிறகும் அவர் சதம் அடித்தார். இது ஒரு தரமான பேட்டருக்கான அடையாளம். அவர் ஆதிக்கம் செலுத்தினார். 30-40 ரன்களை கடந்த பிறகு மிக விரைவாக சதமாக மாற்றினார். ஃபார்மில் இல்லாதபோதும் அவர் சதம் விளாசியுள்ளார்” என்று பாராட்டியுள்ளார்.

- Advertisement -

​அணித் தேர்வு குறித்து தொடர்ந்து பேசிய முகமது கைஃப் “லக்ஷ்மன் கோச்சாக இருக்கும்போது வைபவ் சூர்யவன்ஷியை விளையாட வைக்கிறார், அவரது அணியும் வெல்கிறது. அங்கு ஒரு பிளான் இருக்கிறது. கம்பீர் இன்னும் இந்த வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். 2028 வேர்ல்ட் கப் தொடருக்குள் வைபவ், அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகிய மூவரும் ஒன்றாக விளையாட வழி கண்டுபிடிக்க வேண்டும். பல வீரர்கள் டெபியூட் செய்ய வழிகளைக் கண்டுபிடித்துள்ளீர்கள் அல்லவா? எனவே இதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டும். சரியான பிளேயர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆதரவளிப்பதே கோச்சிங் செய்வதன் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும்” என்று கூறி முடித்துள்ளார்.

- Advertisement -