ரோகித் கோலி இல்லை.. டிராவிட்டுக்கு பிறகு நான் பார்த்த சுயநலமில்லாத இந்திய வீரர் இவர்தான் – முகமது கைஃப் பாராட்டு

0
31
Kaif

இந்திய கிரிக்கெட்டில் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு தான் பார்த்த சுயநலமில்லாத இந்திய வீரர் யார் என்பது குறித்து முன்னாள் வீரர் முகமது கைஃப் பாராட்டி பேசியிருக்கிறார்.

ராகுல் டிராவிட் இந்திய கிரிக்கெட்டில் தனக்கு எந்த ரோல் கொடுத்தாலும் அதை எந்தவித தயக்கமும் மறுப்பும் இல்லாமல் ஏற்றுக் கொண்டு அப்படியே செய்யக் கூடியவர். தொடக்க இடத்திலிருந்து எல்லா இடங்களிலும் பேட்டிங் செய்ய வருவார். கேப்டன், துணை கேப்டன் பொறுப்பையும் வகிப்பார். சாதாரண வீரராகவும் இருப்பார். விக்கெட் கீப்பிங், எந்த நிலையிலும் பீல்டிங்கும் செய்வார்.

- Advertisement -

எல்லாவற்றையும் செய்கிறார்

இதுகுறித்து முகமது கைஃப் பேசும்பொழுது ” கேஎல்.ராகுல் கடினமான டெஸ்ட் கிரிக்கெட் வடிவத்தில் துவக்க ஆட்டக்காரராக களம் இறங்க வேண்டும் என்று சொல்லப்பட்ட பொழுது, அவர் எந்த மறுப்பும் சொல்லாமல் உடனடியாக தொடக்க வீரராக டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு வந்தார். கொஞ்சம் எளிய வடிவமான ஒருநாள் கிரிக்கெட்டில் கீழே சென்று விளையாட சொன்னபோது அதையும் எந்தவித மறுப்பும் இல்லாமல் செய்தார்”

“மேலும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் சீக்கிரத்தில் ஆட்டம் இழந்தால் ஐந்தாவது இடத்தில் வந்து சதமும் அடிக்க தெரிந்த ஒரு வீரர். விக்கெட்டுகள் தொடர்ந்து விழும்பொழுது நல்ல மன உறுதியை காட்டி ஒரு சிறந்த பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார். ஆட்டத்தின் போக்கை கணிக்க அவருக்கு நன்றாக தெரியும். பொறுமையாக ஆடி பின்பு வேகத்தை அதிகரித்து சதம் அடிப்பதுதான் அவரது பலம்”

- Advertisement -

எந்த சுயநலமும் இல்லாதவர்

“தென் ஆப்பிரிக்க ஒருநாள் தொடரில் கேப்டன் கில் காயம் அடைந்து விளையாடாத நிலையில், கேப்டனாக பொறுப்பேற்று அணியை வழி நடத்தியதுடன் அந்தத் தொடரை வெல்வதற்கு ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் அவர் முக்கிய காரணமாக இருந்தார்”

இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட்ல எனக்கு நடந்தது இந்த பையனுக்கும் நடக்குது.. அவர் என்ன தப்பு செய்தார்? – அஸ்வின் கேள்வி

“டெஸ்டில் தொடக்க ஆட்டக்காரராகவும் ஒருநாள் கிரிக்கெட்டில் கீழ் வரிசையிலும் வருகிறார். பினிஷிங் ரோலும் செய்கிறார். விக்கெட் கீப்பிங் செய்கிறார். ஸ்லிப் பகுதியில் சிறப்பான முறையில் கேட்ச் பிடிக்கிறார். வேறு எங்காவது சென்று பீல்டிங் செய்ய சொன்னாலும் செய்கிறார். சமயத்தில் கேப்டன்ஷிப் பொறுப்பையும் வகிக்கிறார். உண்மையில் ராகுல் டிராவிட்டுக்குப் பிறகு நான் பார்த்த சுயநலமே இல்லாத ஒரு வீரர் என்றால் அது கேஎல்.ராகுல்தான்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -