இந்திய கிரிக்கெட்

விராட் கோலிய கிளப் பவுலர் கூட அவுட் செய்வார்.. ஹெட்டுக்கு நீங்க இதை செய்யுங்க – முகமது கைஃப் அறிவுரை

இந்திய அணியின் விராட் கோலிக்கு எதிரான வீக்னஸ் ஆஸ்திரேலியாவுக்குத் தெரியும் பொழுது ஹெட் வீக்னஸ் வைத்து இந்திய அணியினர் அவரை அவுட் செய்ய முடியாதா? என முகமது கைஃப் கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஆப் ஸ்டெம்புக்கு வெளியே செல்லும் பந்தில் தொடர்ந்து ஆட்டம் இழந்து வருகிறார். அதே சமயத்தில் ஹெட் இந்திய அணிக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.

கிளப் லெவல் பவுலர்

இந்த நிலையில் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று போட்டிகளை மட்டுமே விளையாடும் கிளப் லெவல் வீரர் போலான ஸ்காட் போலண்ட் விராட் கோலியின் வீக்னசை வைத்து ஆட்டம் இழக்க செய்வது போல, ஹெட்டையும் இந்திய அணியினர் அவரது வீக்னசை வைத்து அவுட் செய்ய வேண்டும் என முகமது கைஃப் கூறியிருக்கிறார்.

இது குறித்து முகமது கைஃப் கூறும் பொழுது “போலண்ட் போலான பந்துவீச்சாளர் வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று போட்டிகள் மட்டுமே விளையாடுகிறார்கள். அவருக்கு விராட் கோலிக்கு எதிராக எங்கு வந்து பேச வேண்டும்? என்று தெரிகிறது. ஆப் ஸ்டெம்புக்கு வெளியே வீசினால் விராட் கோலி அந்த பந்தை விளையாடி நிக் செய்து அவுட் ஆவார் என்பது வெளிப்படையான ரகசியம்”

- Advertisement -

ஹெட்டுக்கு இதை செய்யுங்கள்

“விராட் கோலியை எப்படி சிக்க வைப்பது? என்று அவர்களுக்கு தெரியும் என்றால், ஹெட்டை எப்படி வெளியே அனுப்புவது என்று நமக்கும் தெரிய வேண்டும். அவருடைய பலவீனமும் ஆப் ஸ்டெம்புக்கு வெளியே இருந்தால், நாம் ஏன் தொடர்ந்து அங்கு பந்து வீசக்கூடாது?ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் பலவீனங்கள் இருக்கிறது”

இதையும் படிங்க :பும்ராவை சமாளிக்க இதுதான் சிறந்த மந்திரம்.. அவர்கிட்ட இது மட்டும் செய்யக்கூடாது – மிட்சல் மார்ஸ் பேட்டி

“விராட் கோலியின் பலவீனம் நமக்கு வெளிப்படையாக தெரிகிறது. ஆப் டெம்பிள் வெளியில் வீசினால் அவர் அதை விளையாட சென்று ஆட்டம் இழக்கிறார். இதே மாதிரியான யுக்தியை நீங்கள் ஹெட்டுக்கும் பயன்படுத்த வேண்டும். சரியான திட்டமிடல் செய்து வர வேண்டும். அந்த முறையில் சென்று அதை செயல்படுத்த வேண்டும்” கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by