தற்போது இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்கும் சுப்மன் கில்லுக்கு ரோஹித் சர்மாவால் ஒரு விஷயத்தில் குற்ற உணர்ச்சியாக இருக்கும் என முகமது கைப் கூறியிருக்கிறார்.
இந்திய ஒருநாள் அணிக்கு முதல் முறையாக கேப்டன் பொறுப்பை ஏற்ற சுப்மன் கில் முதல் தொடரை இழந்திருக்கிறார். விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா திரும்பி வந்திருக்கும் நிலையில் இந்த தோல்வியும் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
குற்ற உணர்ச்சியாக இருக்கும்
இதுகுறித்து முகமது கைப் கூறும் பொழுது “எந்த ஒரு கேப்டன் இருக்கும் கொஞ்சம் நேரம் தேவையாக இருக்கும். தற்பொழுது கில் தலைமையில் ஏற்கனவே கேப்டன் பொறுப்பில் நிரூபிக்கப்பட்ட ரோகித் சர்மா விளையாடுகிறார். ஒரு கேப்டனாக ரோகித் சர்மா எந்த தவறையும் செய்யவில்லை கில் அறிவார். இருந்தாலும் ரோகித் சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்”
“கில் தன்னுடைய ஹோட்டல் அறைக்கு செல்லும் பொழுது ரோகித் பாய் எந்த தவறையும் செய்யவில்லை என்றும், ஆனால் கேப்டன் பொறுப்புக்கு தன்னை மற்றவர்கள் ஆதரிக்கிறார்கள் என்று நினைப்பார். இது அவருக்கு குற்ற உணர்ச்சியை உண்டாக்கக் கூடியதாக இருக்கும்”
கில்லுக்கு பதட்டம் இருக்கும்
“எனவே தொடர்ந்து பயணம் மற்றும் பல போட்டிகளில் விளையாடிக் கொண்டே இருப்பதால் ஏற்படும் சோர்வு, மேலும் மூத்த வீரர்கள் ரோகித் மற்றும் விராட்டை வழிநடத்துவது என அத்தனையையும் கருத்தில் கொள்ளும் பொழுது கில் ஒருநாள் கேப்டனாக மாறுவதற்கான காலகட்டம் இது”
இதையும் படிங்க : இந்தியா டி20 தொடர்.. ஆஸி அணியில் அதிரடி 4 மாற்றங்கள்.. 2026 உலக கோப்பைக்கு ஒத்திகை – முழு விபரம்
“அதே சமயத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மாவை வழிநடத்தும் போது நிச்சயம் கில் பதட்டப்படுவார். அவருடைய பேட்டில் இருந்தும் ரன்கள் வரவில்லை, மேலும் இரு நாடுகள் இடையேயான ஒரு.நாள் தொடரையும் இழந்திருக்கிறார். எனவே இதையெல்லாம் தாண்டி அவர் தன்னை கேப்டனாக உருவாக்கிக் கொள்ள வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.






