இந்திய கிரிக்கெட்

சூரியவன்சி நம்பிக்கையை நாசம் பண்றாங்க.. இஷான் கிஷான் விஷயத்தில் அந்த உண்மை நமக்கு தெரியவே இல்லை – கைப் குற்றச்சாட்டு

​நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரின் போது இந்திய அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியை பிளேயிங் லெவனில் இருந்து நீக்கியது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைப் தனது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

- Advertisement -

​இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் சில போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறங்கி தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் வைபவ் சூர்யவன்ஷி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருந்தார். ஆனால், காயம் காரணமாக அணியில் திரும்பிய இஷான் கிஷனுக்காக வைபவ் சூர்யவன்ஷி அடுத்த போட்டியில் ஆடும் லெவனில் இருந்து கழட்டிவிடப்பட்டார்.

​இது குறித்து இந்திய முன்னாள் வீரர் முகமது கைப் பேசும்போது, “தொடரை ஏற்கனவே வென்றுவிட்ட சூழலில், இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷிக்கு தொடர்ந்து வாய்ப்பளித்திருக்க வேண்டும். மறுபுறம் புதிய வீரர்களைக் கொண்டு வருகிறோம் என்கிறார்கள். அப்படியானால் அதே நியாயம் வைபவனுக்கும் பொருந்த வேண்டும் அல்லவா? இஷான் கிஷன் முழு உடல் தகுதியுடன் இருக்கிறாரா என்பதும் சந்தேகமாகவே இருந்தது. இந்தச் சூழலில் வைபவ்க்கு வாய்ப்பு வழங்குவதற்கான சரியான களம் அங்கு அமைந்திருந்தது. ஆனால் அணியின் இந்த திடீர் முடிவு அந்த இளம் வீரரின் தன்னம்பிக்கைக்கு எந்த வகையிலும் உதவாது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts