தற்போது இந்திய அணி வீரர் அபிஷேக் ஷர்மா தொடர்ந்து மூன்று டக் அவுட்டுகள் உலகக் கோப்பை தொடரில் ஆகியிருக்கிறார். இந்த நிலையில் அவரது பேட்டிங் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் பேசி இருக்கிறார்.
நடப்பு உலக கோப்பை தொடர்க்கும் முன்பாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களில் அபிஷேக் ஷர்மா மிகச்சிறந்த பார்மில் இருந்தார். எனவே அவர் பெரிய தாக்கத்தை உண்டாக்குவார் என்று எதிர்பார்த்து இருந்த நிலையில் ஏமாற்றம் உண்டாகியுள்ளது.
இதுவரையில் ஒரு பேட்ஸ்மேன் டி20 உலகக் கோப்பை தொடரில் தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் டக் அவுட் ஆனது கிடையாது. ஆனால் இந்த மோசமான வரலாற்றை அபிஷேக் ஷர்மா தன்னுடைய பெயருக்கு மாற்றி இருக்கிறார். இப்படி ஒரு சரிவு அவருக்கு வரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
அபிஷேக் ஷர்மா முழுக்க லெக் சைடில் விளையாட நினைக்கின்ற காரணத்தினால் ஆப் ஸ்பின்னில் அவர் தொடர்ந்து ஆட்டம் இழக்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. இதுகுறித்து இந்திய முன்னால் ஆப் ஸ்பின்னர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹர்பஜன்சிங் இருவரும் அறிவுரை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து முகமது அமீர் பேசும் பொழுது ” சையும் அயூப் சில ஆண்டுகளுக்கு முன்பாக பிஎஸ்எல் தொடர் விளையாட வந்த பொழுதும் இதே பிரச்சனை இருந்தது. அவர் ஆரம்பத்தில் லெக் சைடில் நோ லுக் ஷாட் வரையில் மிகச் சிறப்பாக விளையாடினார். அவர் அந்தப் பக்கத்திலேயே தொடர்ந்து விளையாடியதால் அவருடைய பலவீனம் என்ன என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் ஆப் சைடில் நான்காவது முதல் ஆறாவது ஸ்டெம்ப் வரையில் பந்து வீசும் பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் அவுட் ஆனார்”
இதையும் படிங்க : 179 ரன்.. பெரிய மைதானம்.. இலங்கை அணி சும்மா சாய்த்த ஜிம்பாப்வே.. சிக்கந்தர் ராஸா கலக்கல் பேட்டிங்
“அபிஷேக் ஷர்மாவுக்கும் ஏறக்குறைய இதே பிரச்சினைதான் இருக்கிறது. அவர் ஒவ்வொரு பந்துக்கும் அடிப்பதற்கு ஏதுவாக ஸ்லாட்டில் இருக்க வேண்டும் என்று பார்க்கிறார். ஆனால் சர்வதேச போட்டிகளில் அப்படி எல்லா பந்தையும் நாம் அடித்து விட முடியாது. சல்மான் அலி ஆகா மற்றும் ஆரியன் தத் இருவரும் ஒரே முறையில் அவரை ஆட்டம் இழக்க வைத்தார்கள். சர்வதேச கிரிக்கெட் நிச்சயமாக உங்களுடைய பலவீனத்தை வெளிப்படுத்தும்” என்று கூறியிருக்கிறார்.