300 ரன் அடிச்சாலும் இந்தியா கிட்ட முடியாது.. அவங்க உள்ள வர்றப்பவே இந்த திட்டத்தோட வராங்க – மிட்சல் சான்ட்னர் பேட்டி

0
496
Santner

நேற்று இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 208 ரன்கள் எடுத்தும் தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து நியூசிலாந்து கேப்டன் மிச்சல் சான்ட்னர் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 208 ரன்கள் கொதித்தது. இதைத்தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 15.2 ஓவரில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இஷான் கிஷான் 32 பந்தில் 76 ரன்கள் சூரியகுமார் யாதவ் ஆட்டம் இழக்காமல் 37 பந்தில் 82 ரன்கள் குவித்தார்கள்.

- Advertisement -

300 ரன்கள் போதாது

சில ஆண்டுகளாக இந்திய டி20 அணி பேட்டிங் யூனிட் அதிரடியாக விளையாடுவதை அடிப்படை திட்டமாக வைத்திருக்கிறது. சீக்கிரத்தில் விக்கட்டுகளை இழந்தாலும் கூட அடுத்து வரக்கூடியவர்கள் தைரியமாக அடித்து விளையாடுகிறார்கள். இதனால் இந்திய அணியை கட்டுப்படுத்துவது கடினமான விஷயமாக எதிரணிகளுக்கு இருக்கிறது.

இதுகுறித்து மிட்சல் சான்ட்னர் பேசும்போது “இந்த மாதிரி அதிரடியாக விளையாடும் அணிக்கு நாம் 300 ரன்கள் எடுத்தால்தான் சமாளிக்க முடியும் போல. இந்திய அணி உள்ளே வரும்போது நல்ல இண்டெண்ட் உடன் வந்தார்கள். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் சுதந்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிகிறது. ஆனால் நாங்களோ எங்கெங்கு முடிகிறதோ அங்கங்கே அழுத்தம் கொடுக்க வேண்டிய நிலையில் இருந்தோம். ஏனென்றால் எங்களுக்கு 200 ரன்கள் போதாது என்று தெரியும். அதனால் கூடுதலாக முயற்சி செய்ய வேண்டிய நிலைமை இருந்தது”

- Advertisement -

இந்தியா பரிசோதனை செய்யும்

“டி20 உலகக் கோப்பை நேரத்தில் எல்லோரும் பார்மில் இருக்க வேண்டும் என்று இந்திய தரப்பில் நினைப்பார்கள். இதனால் சில வீரர்களை வைத்து வித்தியாசமான காம்பினேஷனை இறக்குவார்கள். எங்களுக்கும் போட்டியை வெல்ல ஆசையாக தான் இருக்கிறது. இந்த போட்டியில் எங்களுக்கு நிறைய அழுத்தம் வந்தது. ஆனாலும் கற்றுக்கொள்ள நிறைய இருந்தது”

இதையும் படிங்க: நல்லவேளை.. இஷான் கிஷான் விளையாடும்போது சூர்யாவுக்கு இந்த இடத்தில் ஈகோ வரல.. இல்லனா கதையே வேற – ஆகாஷ் சோப்ரா

“நாங்கள் பந்து வீசும் போது பனிப்பொழிவு நிறைய இருந்தது. பந்தை பிடிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் இங்கு கொஞ்சம் குளிர்ச்சியாகவும் இருந்தது. நாம் அடுத்த போட்டிக்கு உடனே சென்று அங்கு எப்படி சூழ்நிலை இருக்கிறது” என்று பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -