நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் காயமடைந்து வெளியேறியிருக்கும் கிளன் மேக்ஸ்வெல் இடத்திற்கு ஆஸ்திரேலியாவின் அதிரடி வீரர் ஒருவரை ரிக்கி பாண்டிங் கொண்டு வந்து அசத்தியிருக்கிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பிளான் மேக்ஸ்வெல் நான்கு கோடி ரூபாய்க்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஆனால் அவருக்கு கையில் விரல் முறிவு ஏற்பட்டதால் தொடர்ந்து விளையாட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இந்த நாள் அவர் உடனடியாக ஐபிஎல் தொடரில் இருந்து இந்த ஆண்டு விலகினார்.
ரிக்கி பாண்டிங் தெரிவித்த கருத்து
இந்த ஆண்டு ஆரம்பத்தில் பாகிஸ்தானில் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்றது. இதன் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தும் பி எஸ் எல் டி20 லீக் ஐபிஎல் தொடர் நடக்கும் நேரத்தில் நடைபெற வேண்டிய கட்டாயம் உருவானது. இதனுடைய தாக்கம் ஐபிஎல் தொடரிலும் எதிரொலித்தது குறிப்பிடத்தக்க.
அதாவது ஐபிஎல் தொடரில் காயமடையும் வீரர்களுக்கு தரமான மாற்று வீரர்கள் கிடைக்கவில்லை. ஏனென்றால் தரமான மாற்று வீரர்கள் ஐபிஎல் தொடர் நடக்கும் நேரத்தில் பிஎஸ்எல் தொடரில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். எனவே பஞ்சாப் கிங்ஸ் அணியில் காயமடைந்த மேக்ஸ்வெல் மற்றும் பெர்க்ஷன் ஆகியோருக்கு மாற்று வீரர்கள் கிடைக்கவில்லை. இதை வெளிப்படையாகவே ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.
அதிரடி வீரர் சேர்ப்பு
இந்த நிலையில் பிபிஎல் தொடரில் ஹரிகேன்ஸ் ஹோபர்ட் அணிக்காக விளையாடும் மிடில் ஆர்டர் வலதுகை பேட்ஸ்மேன் மிட்சல் ஓவன் பஞ்சாப் கிங்ஸ் அணியில் மேக்ஸ்வெல் இடத்திற்கு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இந்த ஆண்டு பிபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் சிட்னி தண்டர் அணியை வீழ்த்தி ஹரிகேன்ஸ் ஹோபர்ட் முதல்முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதற்கு 39 பந்தில் அதிரடி சதம் அடித்திருந்தார். ஏற்கனவே இவர் இதே தொடரில் இன்னொரு சதமும் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : நான்தான் சாமினு சிஎஸ்கேவுக்கு விராட் காட்டிட்டார்.. அவர் செஞ்ச இந்த 2 விஷயமே சாட்சி – இர்பான் பதான் பாராட்டு
மேலும் இந்த ஆண்டு பிபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக இவர் மொத்தம் 36 சிக்ஸர்கள் அடித்து ஒரு பிபிஎல் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்தவராக புதிய வரலாறு படைத்தார். மேலும் இறுதிப் போட்டியில் சிட்னி தண்டர் அணிக்கு எதிராக 9.4 ஓவரில் இவர் சதம் அடித்து அதிவிரைவாக குறைந்த ஓவர்களில் சதம் அடித்த வீரர் என்ற சாதனையையும் படைத்திருந்தார். தற்போது பேட்டிங் ஃபார்மில் இல்லாத மேக்ஸ்வெல்லுக்கு நல்ல பேட்டிங் ஃபார்மில் இருக்கும் மிட்சல் ஓவன் கிடைத்தது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.






