ஐபிஎல் 2025

ஐபிஎல் இப்பவே முடியணும்.. பிசிசிஐ எல்லோரையும் மிரட்டிட்டு இருக்கு – மிட்சல் ஜான்சன் குற்றச்சாட்டு

தற்போது மீண்டும் தொடங்கும் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் கட்டாயப்படுத்தி வருவதாக ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மிட்சல் ஜான்சன் குற்றம் சாட்டி இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட விரும்பத்தகாத பதட்டத்தின் காரணமாக ஐபிஎல் தொடர் இடையில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நாளை மறுநாள் மீண்டும் ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டு பதினாறு போட்டிகள் நடத்தப்பட்டு ஜூன் மூன்றாம் தேதி முடிவுக்கு வருகிறது.

பாதிக்கப்படும் தென் ஆப்பிரிக்க அணி

இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் அடுத்த மாதம் ஜூன் 11ஆம் தேதி ஆரம்பித்து 15ஆம் தேதி வரையில் நடைபெற இருக்கிறது. இந்த இறுதி போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இதன் காரணமாக இந்த இரண்டு அணிகளையும் சேர்ந்த வீரர்கள் தற்போது துவங்கப்படும் ஐபிஎல் தொடருக்கு வர முடியாத நிலை ஏற்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க டி20 லீக்கில் அணிகளை ஐபிஎல் முதலாளிகள் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக மீண்டும் துவங்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கு தென் ஆப்பிரிக்க வீரர்களை வரவழைக்க இந்திய கிரிக்கெட் வாரியம் கட்டாயப்படுத்துகிறது என்று மிட்சல் ஜான்சன் கூறியிருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் முடிந்து இருக்க வேண்டும்

இது குறித்து மிட்சல் ஜான்சன் பேசும்போது “தற்போது ஐபிஎல் தொடர் மற்றும் பிஎஸ்எல் தொடர் என இரண்டுமே முடிந்திருக்க வேண்டும். மேலும் சரியான நேரம் கிடைக்கும் பொழுது இந்த தொடர்களை மீண்டும் நடத்தி இருக்க வேண்டும். இந்த நிலையில் முடிவு எடுக்கும் அதிகாரம் வீரர்களிடம் இருந்தாலும் கூட, அவர்கள் ஐபிஎல் தொடருக்கு செல்லாவிட்டால் அது எதிர்காலத்தில் பொருளாதார ரீதியான இழப்புகளை ஏற்படுத்தலாம். அணிகளின் நலன் என்பதை எல்லாம் தாண்டி வீரர்களின் தனிப்பட்ட பாதுகாப்பு மற்றும் விருப்பம் முக்கியம்”

இதையும் படிங்க : ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத் தொகை அதிகரிப்பு.. ஜெய்ஷா அறிவிப்பு

“தற்போது ஆஸ்திரேலிய வீரர்களை விட தென் ஆப்பிரிக்கா மிகவும் கடினமான சூழ்நிலையில் இருப்பதாக தோன்றுகிறது. ஏனென்றால் தென் ஆப்பிரிக்க டி20 லீக்கில் தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்திற்கு இந்தியாவுடன் நிதி உறவு பெரியதாக இருக்கிறது. தற்போது வீரர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts