இந்திய கிரிக்கெட்

நான் ஆரம்பத்துல கில்லை திட்டினது உண்மை.. ஆனா இப்ப அதை மாத்திக்கிறேன்.. காரணம் இதுதான் – மைக்கேல் வாகன் பேட்டி

இங்கிலாந்து தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாக இந்திய டெஸ்ட் கேப்டன் கில் பற்றி பேசி இருந்த வார்த்தைகளை தற்போது வாபஸ் வாங்கி கொள்வதாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 3 இன்னிங்ஸ்களில் கேப்டன் கில் ஒரு சதம் மற்றும் ஒரு இரட்டை சதத்துடன் மொத்தம் 424 ரன்கள் குவித்திருக்கிறார். இந்தத் தொடர் முடிவடையும் பொழுது அவர் பெரிய அளவில் ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

35லிருந்து 40

இங்கிலாந்து தொடர் துவங்குவதற்கு முன்பாக கில் உடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ரன் சராசரி 35 என குறைவாக இருந்தது. அடுத்த விராட் கோலி என்று சொல்லப்படும் பேட்ஸ்மேன் ரன் சராசரி 35 என்பது மிகவும் குறைவானது என பல முன்னாள் வீரர்கள் விமர்சனம் வைத்திருந்தார்கள். மிக முக்கியமானவராக மைக்கேல் வாகன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இரண்டு டெஸ்ட் போட்டியில் விளையாடிய கில் ரன் குவித்ததும் அவருடைய டெஸ்ட் ரன் சராசரி 40 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த தொடர் முடிவடையும் பொழுது கில் உடைய ரன் சராசரி 45 ஆக மாறும் எனவும், அவருடைய பேட்டிங் தொழில்நுட்பம் மிகவும் சுத்தமாக இருப்பதாகவும் மைக்கேல் வாகன் பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

சுத்தமான தொழில்நுட்பம்

இதுகுறித்து மைக்கேல் வாகன் பேசும் பொழுது ” இந்த தொடரின் ஆரம்பத்தில் அவருடைய 35 என்ற ரன் சராசரி அவருடைய திறமைக்கு ஏற்றதாக சரியானதாக இல்லை என்று நான் விமர்சனம் செய்தேன். தற்போது இந்தத் தொடர் முடிவடையும் பொழுது அவருடைய ரன் சராசரி 45 ஆக இருக்கும் என இப்பொழுது சொல்கிறேன். இப்போது அவர் ஒரு அற்புதமான தொடக்கத்தை இந்த தொடரில் கொடுத்திருக்கிறார். கேப்டனாக வந்து சிறப்பான முறையில் விளையாடியிருக்கிறார்”

இதையும் படிங்க : நல்லா விளையாடிட்ட ஆனா 300 ரன்ன மிஸ் பண்ணிட்டியே.. கில்லுக்கு வந்த ஸ்பெஷல் மெசேஜ்.. உணர்வுபூர்வமான சம்பவம்

“ஆடுகளத்தில் எந்தவிதமான உதவியும் பந்துவீச்சாளர்களுக்கு இல்லை என்று தரமான வீரர்களுக்கு தெரியும் பொழுது, அவர்கள் அதைப் புரிந்து கொண்டு பெரிய அளவில் ரன் எடுக்கிறார்கள். கில் விளையாடுவதை பார்க்கும் பொழுது அவருடைய கால் மிகச் சிறப்பாக செயல்படுகிறது. அவருடைய பேட்டிங் தொழில்நுட்பம் மிகவும் சுத்தமாக இருக்கிறது” என்று பாராட்டி கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts