இங்கிலாந்து அணி திருந்தவே இல்லை ! 5வது டெஸ்ட்டில் இங்கிலாந்து அணி செய்த தவறை சுட்டிக் காட்டியுள்ள மைக்கல் வாகன்

0
208
Michael Vaughan

இங்கிலாந்திற்கு மூன்று வடிவ கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்க இந்திய அணி தற்போது சுற்றுப்பயணம் செய்துள்ளது. கடந்த வருடம் கோவிட்டால் விளையாட முடியாது தவறவிட்ட ஒரு டெஸ்ட் போட்டியில், கடந்த 5 ஆம் தேதி இந்திய அணி விளையாடி வருகிறது.

இந்தப் போட்டியில் முதலில் டாஸை வென்று இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இந்திய அணியை பேட்டிங் செய்ய அழைக்க, உள்ளே வந்த ஐந்து இந்திய விக்கெட்டுகள் வேகமாய் 98 ரன்களில் பெவிலியனுக்கு திரும்பின.

- Advertisement -

இந்திய அணி இக்கட்டான நிலையில் இருக்க, அடுத்து இணைந்த ரிஷாப் பண்ட், ரவீந்திர ஜடேஜா இருவரும் 222 ரன் பார்ட்னர்ஷிப் அமைத்து அணியை மீட்டர். இரண்டாம் நாள் முதல் செசனில் இந்திய அணி 416 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. 375 ரன்களுக்கு இந்திய அணி 9 விக்கெட்டுகளை இழக்க 400 ரன்களை எட்டுவது சிரமமாகவே இருக்கும் என்ற நிலையே இருந்தது.

இப்படியான சூழலில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் குறிப்பாய் ஸ்டூவர்ட் பிராட் பவுன்சராய் பும்ராவிற்கு வீசி, ஒரே ஓவரில் 35 ரன்களை வாரி வழங்கி, இந்திய அணியை 400 கடக்க உதவி புரிந்தார். இந்திய கேப்டன் பும்ரா பிராடின் அந்த ஓவரில் 29 ரன்களை நொறுக்கி, டெஸ்டில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற உலகச் சாதனையைப் படைத்தார். கடந்த ஆண்டு லார்ட்ஸ் மைதானத்தில் சமி-பும்ரா ஜோடிக்கு பவுன்சராய் வீசியதாலே, இங்கிலாந்து அந்தப் போட்டியில் தோற்றிருந்தது.

இதுகுறித்து இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் குறிப்பிட்டு பேசியிருக்கிறார். அதில் அவர் “இங்கிலாந்து காலையில் தவறாகவே மீண்டும் ஆட்டத்தைப் புரிந்திருந்தது. நான் பென் ஸ்டோக்ஸ் மற்றும் பிரன்டன் மெக்கல்லமின் தீவிர இரசிகன். கண்டுபிடிப்பு, படைப்பு, புதிய சிந்தனைகளை நான் விரும்புகிறேன். ஆனால் ஆடுகளம் தட்டையாக இருக்கும் போது நமக்குச் சாதகமாக அமையாது” என்றார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய மைக்கேல் வாகன் “மேகங்கள் சூழ்ந்திருந்த வேளையில், அணியில் ஆண்டர்சன், பிராட் போன்ற ஜாம்பவான்கள் இருக்கும் போது, ஆப்-ஸ்டம்பிற்கு மேலே வீசியிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் பீல்டிங்கை விரித்து வைத்து பவுன்சர் வீசுகிறார்கள். இது கடந்த ஆண்டு லார்ட்ஸில் நடந்ததைப் போலவே இருந்தது. லார்ட்ஸில் இருந்து இவர்கள் கற்றுக்கொள்ளவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்று விமர்சித்துக் கூறினார்!