நேற்று ஐபிஎல் தொடரில் பகலில் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் இசான் கிசான் சதம் அடித்ததை பாராட்டி இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேசியிருக்கிறார்.
இதுவரை நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் இசான் கிசானை தக்க வைக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவரை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தில் 11 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. ஏற்கனவே அந்த அணியில் அதிரடி வீரர்கள் இருக்கும் நிலையில் இவரை வாங்கியதால் மேலும் அவர்களது பேட்டிங் யூனிட் வலிமையாகியது.
நேற்று வழக்கம்போல் ஹைதராபாத் தொடக்க ஆட்டக்காரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் ஹெட் இருவரும் அதிரடியாக ஆடி முடிக்க, ஒரு பக்கத்தில் கடைசி வரை நின்று வெறும் 47 பந்துகளை மட்டுமே எதிர் கொண்டு இசான் கிசான் 16 ரன்கள் குவித்தார். இது அந்த அணிக்காக அறிமுக போட்டியில் அடித்த முதல் சதமாகவும், அந்த அணிக்காக இந்திய வீரர் அடித்த முதல் சதமாகவும் பதிவாகியது.
மேலும் பல ஐபிஎல் அணிகளுக்கும் இவரது தேவை இருந்த போதும் கூட, பெரிதாக இவரை வாங்குவதற்கு எந்த அணி நிர்வாகமும் ஆர்வம் காட்டவில்லை. இதன் காரணமாக 11 கோடி ரூபாய்க்கு இசான் கிசானை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் எளிதாக வாங்கிக் கொண்டது. தற்போது முதல் போட்டியிலேயே சதம் அடித்து அணி நிர்வாகத்தை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறார்.
இது குறித்து மைக்கேல் வாகன் கூறும் பொழுது “நேற்று இஷான் கிஷானின் கொண்டாட்டம் மூன்று பேருக்கு கொண்டாட்டமாக இருந்திருக்காது. முதலில் அவரது கொண்டாட்டம் யாருக்கானதாக இருந்திருக்கலாம் என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகத்திற்காக இருக்கலாம். அடுத்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவை பார்த்து இருந்திருக்கலாம். மூன்றாவதாக தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கருக்கு செய்தி அனுப்புவதாக இருந்திருக்கலாம். உண்மையில் அவர் மிகவும் நிலைத்தன்மை கொண்ட அற்புதமான வீரர்”
இதையும் படிங்க : நான் இதை செய்யலனா.. களத்துல பயனற்றவனா போய்டுவேன்.. டீமுக்கு தேவைப்பட மாட்டேன் – தோனி பேச்சு
“நான் தேர்வுக்குழு தலைவராக இருந்து பேச விரும்புகிறேன். அணித் தேர்வு பற்றிய பேச்சு வார்த்தை நடக்கும் பொழுது அது நீளமானதாக மாறுகிறது. இந்திய கிரிக்கெட்டில் இருக்கும் திறமைகளை வைத்து பார்த்தால் இஷான் கிஷான் முதல் ஐந்து இடங்களுக்குள் இப்பொழுது வரவில்லை. எனவே நீங்கள் அசாதாரணமான முறையில் விளையாடினால் மட்டுமே அணிக்குள் வர முடியும் என்று நான் அவரிடம் சொல்லுவேன். மூன்று வடிவ கிரிக்கெட்டில் சதம் அடிப்பதற்கு கடினமான வடிவத்தில் அவர் சதம் அடித்திருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.