இந்திய கிரிக்கெட்

இந்திய அணியை பார்த்தா.. என்னால் நம்பவே முடியல.. முக்கிய வீரரை கூட எடுக்காம அவ்ளோ வலுவா இருக்கு – மைக்கேல் வாகன்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா மற்றும் வங்காளதேச அணிகள் மோதி விளையாடுகின்றன. இதில் வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்து முடித்த நிலையில் அதற்குப் பிறகு இந்திய அணி களம் இறங்கி விளையாட உள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் இந்திய அணி தேர்வு குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

இந்தியா வங்கதேசம் ஒருநாள் போட்டி

இந்திய கிரிக்கெட் அணி தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இந்திய அணியைப் பொறுத்தவரை கேப்டன் ரோகித் சர்மா தொடக்க வீரராக கில் மற்றும் மூன்றாவது வரிசை ஆட்டக்காரராக விராட் கோலியை தேர்வு செய்துள்ளார். மிடில் வரிசை பேட்ஸ்மேன்களாக ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் இருக்க, ஆல்ரவுண்டர் பட்டியலில் மூன்று வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

ஹர்திக் பாண்டியா, அக்சார் பட்டேல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்த லிஸ்டில் இருக்க பந்து வீச்சாளர்கள் வரிசையில் ஹர்ஷித் ராணா, முகமது சமி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மற்றொரு விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட் இந்த அணியில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் முக்கிய வீரரான ரிஷப் பண்ட் இடம்பெற முடியாத அளவுக்கு இந்திய அணியின் பேட்டிங் ஆழம் நம்ப முடியாத வகையில் இருப்பதாக சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தியாவின் பேட்டிங் நம்ப முடியவில்லை

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்திய 50 ஓவர் அணி ரிஷப் பண்ட்டை கூட தேர்வு செய்ய முடியாத அளவிற்கு நம்ப முடியாத பேட்டிங் ஆழம் இருக்கிறது. கே எல் ராகுல் தான் இப்போது இந்திய அணியின் நம்பர் ஒன் விக்கெட் கீப்பர், இப்போதைக்கு நான் சொல்லக்கூடியது இதுதான். ரிஷப் பண்ட்க்கு வாய்ப்பு கிடைக்காது என்று சொல்லவில்லை. ஆனால் இப்போதைக்கு கே.எல் ராகுல் தான் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இரண்டு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களை ஒரே நேரத்தில் விளையாட வைக்க முடியாது என்ற காரணத்தினால் தான் இந்திய அணி ஒரு பேட்ஸ்மேன் மட்டும் தேர்வு செய்துள்ளது” என்று மைக்கல் வாகன் கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க:CT 2025: சச்சினின் 27 வருட சாதனையை முறியடித்த முகமது ஷமி.. ஜாகிர் கான் ரெக்காடும் முறியடிப்பு

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 49.4 அவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 228 ரன்கள் குவிக்க, இந்திய அணி தற்போது 7 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 41 ரன்கள் எடுத்து விளையாடுகிறது. இந்திய அணித் தரப்பில் பந்துவீச்சில் முகமது சமி அதிகபட்சமாக 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts