அபிஷேக் இல்லை.. இவர் உலக கோப்பையில் பெருசா பண்ண போறார்.. கம்பீருக்கு பாராட்டுகள் – மைக்கேல் கிளார்க் கருத்து

0
8
Clarke

அடுத்த சில நாட்களில் துவங்க இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் ஒரு வீரர் மிகச் சிறப்பாக செயல்படுவார் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியிருக்கிறார்.

இந்தியா மற்றும் இலங்கையில் வருகின்ற பிப்ரவரி 7ஆம் தேதி ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. இந்திய அணியில் தற்போது பவுலிங் யூனிட்டை விட பேட்டிங் யூனிட் மிகவும் வலிமையாக இருக்கிறது. இதுகுறித்து மைக்கேல் கிளார்க் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் பலம்

தற்போது இந்திய அணியின் பேட்டிங் யூனிட் மிகவும் பலமாக இருந்து வருகிறது. நேற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இஷான் கிஷான் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் வந்தார்கள். சஞ்சு சாம்சன் கழட்டி விடப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் அபிஷேக் ஷர்மா நேற்று 18 பந்தில் 24 ரன்கள் எடுத்தார். அதே சமயத்தில் இஷான் கிஷான் 20 பந்தில் ஆட்டம் இழக்காமல் 53 ரன்கள் எடுத்தார். இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் டாப் ஆர்டர் மிகவும் பலமாக இருக்கிறது. இது முதல் ஆறு ஓவர்களில் ஆட்டத்தை முடிவு செய்து விடுகிறது.

- Advertisement -

இவர் சிறப்பாக இருப்பார்

இது குறித்து மைக்கேல் கிளார்க் பேசும் பொழுது ” நான் 12 மாதங்களுக்கு முன்பாகவே அபிஷேக் ஷர்மா மூன்று வடிவத்திற்கும் தயாராக இருக்கிறார் என்று கூறியிருக்கிறேன். அவர் மூன்று வடிவத்திற்கும் தேவையான அளவுக்கு தன்னை மாற்றிக் கொள்ளும் திறமையுடன் இருப்பது நல்ல விஷயம். அவர் சரியான நேரத்தில் எல்லா வடிவத்திலும் விளையாட வேண்டியது காலத்தின் கட்டாயம்”

இதையும் படிங்க : பேட்ஸ்மேன்கள் விரும்பாத அந்த விஷயத்தை கம்பீர் செய்யணும்.. இல்லனா உலகக்கோப்பை கஷ்டம் – பரத் அருண் அறிவுரை

“மேலும் இசான் கிசானை அணிக்குள் கொண்டு வந்து தொடர் வாய்ப்புகளை கொடுத்துக் கொண்டிருப்பதற்கு பயிற்சியாளர் மற்றும் தேர்வுக் குழுவுக்கு பாராட்டுக்கள் சொல்ல வேண்டும். அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பு இருக்கு அவர் சரியானதை செய்திருக்கிறார். அவருக்கு வாய்ப்பு கிடைத்தால் உலக கோப்பையில் பெரியதாக செய்வார் என்று எனக்குத் தெரியும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -