இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கிறது. இந்த சூழ்நிலையில் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க் இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற சில யோசனைகளை கூறி இருக்கிறார்.
இங்கிலாந்து சென்று இந்திய அணி சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்துள்ளது. உலகின் நம்பர் ஒன் வேகபந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இருந்த போதிலும் மற்ற பந்து வீச்சாளர்கள் போதிய தாக்கத்தை ஏற்படுத்த தவறினார்கள்.
அதிலும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இடது கை மணிக்கட்டு சுழற் பந்து வீச்சாளர்களுக்கு தடுமாறும் நிலையில் இந்திய அணி ரவீந்திர ஜடேஜாவை மட்டுமே வைத்து நான்கு வேகப்பந்துவீச்சாளர்களோடு தாக்குதலை தொடுத்தது. இருப்பினும் ஜடேஜா இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஒரு விக்கெட் மட்டுமே வீழ்த்தியது பெரிய சிக்கலை ஏற்படுத்தியது. இந்த சூழ்நிலையில் மைக்கல் கிளார்க் இந்திய அணி அடுத்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற குல்தீப் யாதவை உள்ளே கொண்டு வர வேண்டும் என சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “பந்து வீச்சை பொறுத்தவரை நான் எந்த நபரையும் கடுமையாக தாக்க விரும்பவில்லை. ஆனால் இந்திய அணி குல்தீப் யாதவை விளையாட வைக்க வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் ஒரு விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய பந்துவீச்சாளர். மற்ற வீரர்களை காட்டிலும் அவரால் தனித்துவமாக செயல்பட முடியும். மேலும் இந்திய அணி சில காலமாக பேட்டிங் வரிசை மீது முக்கியத்துவம் கொடுத்து பேட்டிங் நீளத்தை அதிகரித்து வருகிறது.
இதையும் படிங்க:ஐசிசி அதிரடி.. 7 புதிய விதிகள் அறிவிப்பு.. இனி யாரும் தப்பிக்க முடியாது.. சுவாரஸ்யமான மாற்றங்கள்
இதனால் நம்பர் ஒன் ஸ்பின்னர் வீரரை அவர்கள் தவற விடுகின்றனர். இங்கிலாந்தில் வெற்றி பெற வேண்டுமானால் நீங்கள் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். பும்ரா ஒரு நட்சத்திரம். அவர் ஒரு சிறந்த தாக்குதலை வெளிப்படுத்தினார். ஆனால் அவரோடு மற்ற மூன்று வேகப்பந்து வீச்சாளர்களும் போதுமான பங்களிப்பை வழங்க வேண்டும். அதேபோல ஜடேஜா முதல் டெஸ்டில் நான் நினைத்த அளவிற்கு பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. ஆடுகளத்தின் தன்மையை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக வீசுவார் என்று நினைத்தேன். ஆனால் பந்துகளை அவர் நேராக வீசி பேட்ஸ்மேன்களுக்கு எளிதான வழிகளை கண்டறிய செயல்பட்டார்” என அவர் பேசியிருக்கிறார்