எனக்கு நல்லா தெரியும்.. இந்திய அணி ரோகித்தை நீக்காது.. அதுக்கு காரணம் இது மட்டும்தான் – மைக்கேல் கிளார்க் பேட்டி

0
995

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் இந்திய அணி வீரர் குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்

இந்திய அணியில் சீனியர் வீரர்களாக கருதப்படும் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இரண்டு பேரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிக மோசமான பேட்டிங் பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள். அதிலும் விராட் கோலி ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து ஓரளவு அடிக்கு கணிசமான பங்களிப்பை வெளிப்படுத்தினார். ஆனால் கேப்டன் ரோஹித் சர்மா முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாத நிலையில் இரண்டாவது போட்டியில் இருந்து கேப்டனாகவும் பேட்ஸ்மேன் ஆகவும் இந்திய அணிக்கு பெரிய பிரச்சனையாக இருக்கிறார்.

இரண்டாவது போட்டியில் தோல்வி மூன்றாவது போட்டியில் டிரா மற்றும் நான்காவது போட்டியில் தோல்வி என இவரது தலைமையில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. மேலும் ஒரு பேட்ஸ்மேன் ஆகவும் ரோஹித் சர்மா இந்தத் தொடரில் வெறும் 30 ரன்கள் மட்டுமே அடித்திருக்கிறார். இருப்பினும் ரோஹித் சர்மா அடுத்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் கிளார்க் அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி அவரை நீக்காது

இது குறித்து மைக்கேல் கிளார்க் கூறும்போது “சிலருக்கு கேப்டன்சி உதவுகிறது. ஆனால் சிலருக்கு அது உதவாது. ரோகித் சர்மா சிட்னி டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என்று எனக்கு தோன்றுகிறது. இந்திய அணி அவரை ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இருந்து வெளியேற்றும் என்று நான் நினைக்கவில்லை. மேலும் ரோகித் சர்மா இந்திய அணியில் சிறந்த பெயரை சம்பாதித்துள்ளார். மேலும் அணியின் கேப்டனாகவும் இருக்கிறார், கேப்டனாக இருக்கும்போது உங்களுக்கு சில சலுகைகள் கிடைக்கும்.

இதையும் படிங்க:நான் பார்த்தேன்.. விராட் கோலி சாம் கான்ஸ்டாஸ் பிரச்சனைக்குப் பிறகு இதான் நடந்தது – அலெக்ஸ் கேரி பேட்டி

ரோகித் சர்மாவின் சொந்த முடிவுகளின் அடிப்படையில் அவரை வெளியேற அனுமதிப்பார்கள் என்று நான் நினைக்கிறேன். ரோகித் சர்மா ஒரு கேப்டனாக என்ன நினைக்கிறார் என்று எனக்கு தெரியவில்லை. அவர் சமீபத்தில் இரண்டாவது குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா கட்டாயம் விளையாடுவார் என்று எனக்குத் தோன்றுகிறது” என கூறி இருக்கிறார்.

- Advertisement -