உலக கிரிக்கெட்

இப்படியா ஆஸி டீமை செலக்ட் பண்ணுவிங்க.. அந்தப் பையன் என்ன தப்பு செஞ்சாரு.. இது சரி இல்ல – மைக்கேல் கிளார்க் விமர்சனம்

இந்திய அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டதற்கு ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

மைக்கேல் கிளார்க் ஏற்கனவே ஆஸ்திரேலிய டெஸ்ட் அணிக்கு துவக்க வீரர் இடத்திற்கு ஏற்கனவே ஆஸ்திரேலியா அணியில் இருக்கும் யாரையாவது பயன்படுத்த வேண்டும் இல்லையென்றால் வெளியில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் யாரையாவது கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு வித்தியாசமான முடிவு

ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் இடத்திற்கு ரென்ஷா, பேன்கிராப்ட் போன்ற மூத்த வீரர்கள் வெளியில் இருந்தார்கள். அதே நேரத்தில் 19 வயதான சாம் கான்ஸ்டாஸ் எல்லோரது கவனத்தையும் கவர்ந்தவராக இருந்தார். எனவே ஆஸ்திரேலியா வீரர்கள் துவக்க வீரருக்கான இடத்தை இரண்டு பக்கத்தில் இருந்தும் கூறிக் கொண்டு வந்தார்கள்.

இந்த நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் கூறியபடி செல்லாமல் ஆஸ்திரேலியா ஏ அணியின் கேப்டன் மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஆன நாதன் மெக்ஸ் வீனியை துவக்க வீரராக கொண்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அவரை நீக்கிவிட்டு இளம் வீரர் சாம் கான்ஸ்டாஸை கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

இது தவறான முடிவு

இதுகுறித்து விமர்சனம் செய்திருக்கும் மைக்கேல் கிளார்க் கூறும்பொழுது ” தற்பொழுது நாதன் மெக்ஸ்வீனி நீக்கப்பட்டிருக்கிறார். இதை என்னால் நம்ப முடியவில்லை அந்த இடத்திற்கு யாரை தேர்ந்தெடுத்து இருந்தாலும், அவர்களுக்கு முழு தொடரையும் வழங்க வேண்டும். தேர்வாளர்கள் இதை தவறாக புரிந்து கொண்டதாக நான் நினைக்கிறேன். மேலும் 38 வயதான உஸ்மான் கவஜா துவக்க வீரராக இருக்கிறார்”

இதையும் படிங்க : அஸ்வினிடம் இருக்கும் அது தோனி இடமே இல்ல.. அடுத்த ஜெய் ஷா அவர்தான் – பாக் ரஷித் லத்திப் வாழ்த்து

“தற்போது இந்த தொடரில் லபுசேன் கொஞ்சம் அழுத்தத்தில் இருந்தார். ஸ்மித்தும் அப்படியே இருந்தார். பிறகு இவர்கள் இருவரும் தங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பில் நல்ல ஸ்கோர் எடுத்தார்கள். இவர்கள் இருவருமே மூத்த வீரர்கள். தற்போது 38 வயதான கவசம் அடுத்த ரெண்டு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாது என்றால் என்ன செய்வார்கள்? திரும்ப மெக்ஸ்வீனியிடம் போவார்களா? இல்லை அவர் வரிசையில் நிற்க வேண்டுமா? இவர்கள் தங்களுடைய தேர்வு தவறு என்று சொல்லப் போகிறார்களா?” என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.

- Advertisement -
Published by