கிரிக்கெட்

இதுக்கு பேரு தான் வாயகொடுத்து புண்ணாக்கி கொள்வதா ? அர்ஜூன் ரணதுங்காவை கிண்டல் செய்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்

இந்திய அணி தற்போது ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு அணிகளுடான சுற்றுப்பயணத்தில் விளையாடுகிறது . முதன்மை வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா,அஸ்வின்,ஜடேஜா போன்ற முன்னனி வீரர்களுடன் 20 பேரை கொண்ட அணியை இங்கிலாந்திற்க்கு அனுப்பியது . இதனை அடுத்து மற்றொரு இந்திய அணிக்கு பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமித்து ஷிகர் தவன் தலைமையிலான சில அனுபவமற்ற மற்றும் இளம் வீரர்களுடன் இந்திய அணி ஒன்றை தயார் செய்து இலங்கை சுற்றுப்பயணத்திற்க்கு அனுப்பியது பி.சி.சி.ஐ.

- Advertisement -

இதனை வன்மையாக கண்டித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா தனது கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.அதில் ” இந்திய ஏ அணியை இலங்கை சுற்றுப் பயணத்திற்கு அனுப்பியது இலங்கை கிரிக்கெட் வாரியத்தை அவமதிப்பதாகும் . தொழில் ரீதி ,மற்றும் வருமான ரீதியான காரணத்திற்காக இந்தியாவின் இரண்டாம் தர அணியுடன் தொடரை ஒப்பந்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியத்தை நான் மிகவும் கண்டிக்கிறேன் இது போன்ற பலவீனமான அணியுடன் மோதுவது இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு அவமானமாகும் . இத்தொடரை ஒப்புக் கொண்ட இலங்கை வாரியத்தை மட்டுமே என்னால் குறை முடியும்” என பகிரங்கமாக கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்று கொழும்பு மைதானத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியை சந்தித்தது . 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் இலங்கை அணியினால் எடுக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி 263 ரன்களை 36.4 ஓவர்களிலேயே சேசிங் செய்தது . இலங்கை அணியினால் வெரும் 3 விக்கெட் மட்டுமே எடுக்க முடிந்தது . இப்போட்டியில் குறிப்பாக பிரித்திவி ஷா ,இஷான் கிசன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரும் சிறப்பாக விளையாடினர்.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியை பலவீனமான அணி என வன்மையாக கண்டித்த இலங்கை அணியின் முன்னால கேப்டன் அர்ஜூன ரணதுங்கா இலங்கை அணி படுதோல்வியை சந்திததும் அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை . இதனிடையில் ப்ரித்திவி ஷா , இஷான் கிஷன் , ஷிகர் தவான் ஆகிய மூவரின் போட்டோவை பதிவிட்டு எங்கே நமது அற்புதமான அர்ஜூன் ரணதுங்காவை காணவில்லை. யாராவது பார்த்தீர்களா என கிண்டல் செய்து தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் பெவன்.

- Advertisement -