கவாஸ்கர் காம்ப்ளி கோலி.. அடுத்த 2 டெஸ்டில் ஜெய்ஸ்வால் உடைக்க முடிந்த மெகா சாதனைகள்

0
334
Jaiswal

இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இதுவரையில் 545 ரன்கள் குவித்து, மிகச் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி பல சாதனைகளை படைத்து வருகிறார்.

முதல் போட்டியில் சதத்திற்கு வெகு அருகில் சென்று தவறவிட்ட அவர், அடுத்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சதம் தாண்டி இரண்டு இரட்டை சதங்கள் அடித்து பிரமிக்க வைத்திருக்கிறார். இந்த வகையில் வினோத் காம்ப்ளி மற்றும் விராட் கோலி இருவருக்கும் பிறகு அடுத்தடுத்த போட்டிகளில் இரண்டு இரட்டை சதங்கள் அடித்தவர் என்கின்ற மெகா சாதனையை படைத்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் ஒரு டெஸ்ட் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தது, ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சித்தர்கள் அடித்தது என்கின்ற உலகச் சாதனைகளையும் படைத்திருக்கிறார்.

தற்போது கவாஸ்கர், வினோத் காம்ப்ளி மற்றும் விராட் கோலி என மூவர்கள் படைத்திருக்கும் சாதனைகளை உடைப்பதற்கான மிக அதிகபட்ச வாய்ப்பில் ஜெய்ஸ்வால் இருக்கிறார்.

வினோத் காம்ப்ளி மொத்தம் 14 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் தன்னுடைய முதல் ஆயிரம் டெஸ்ட் ரன்களை அடித்தது இந்திய அளவில்சாதனையாக இருந்து வருகிறது. தற்பொழுது 13 இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 861 ரன்கள் எடுத்திருக்கிறார். அடுத்த இன்னிங்ஸில் அவர் 139 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் காம்ப்ளி சாதனையைத் தாண்டி அவர் முன்னே செல்ல முடியும். அந்த இன்னிங்ஸில் இன்னும் கூடுதலாக ரன்கள் அடிக்கும் பொழுது இவருக்கு முதல் இடம் கிடைக்கும்.

- Advertisement -

அடுத்து ஒரு டெஸ்ட் தொடரில் 700 க்கும் மேற்பட்ட ரன்களை இரண்டு முறை குவித்தவர் என்ற அரிய சாதனையை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சுனில் கவாஸ்கர் படைத்திருக்கிறார். 1970 ஆம் வருடம் 774 ரன்கள், 1978 ஆம் வருடம் 732 ரன்கள் எடுத்திருக்கிறார். ஜெய்ஸ்வால் இன்னும் நான்கு இன்னிங்ஸ்களில், 229 ரன்கள் அடிக்கும் பொழுது, கவாஸ்கரின் இந்த அரிய சாதனையை முறியடிக்க முடியும்

இதையும் படிங்க : 4வது டெஸ்ட்.. மீண்டும் 2 இந்திய நட்சத்திர வீரர்கள் விலகல்.. மாற்றுவீரரை அறிவித்தது பிசிசிஐ

இதற்கு அடுத்து உள்நாட்டில் விராட் கோலி 692 ரன்கள் மற்றும் இங்கிலாந்துக்கு எதிராக 655 ரன்கள் குவித்திருக்கிறார். தற்பொழுது ஜெய்ஸ்வால் 545 ரன்கள் எடுத்திருக்கும் நிலையில், இன்னும் நான்கு இன்னிங்ஸ்களில் இதை முறியடிப்பதற்கான மிக அதிகபட்ச வாய்ப்பு இருக்கிறது.மூன்று பெரிய சாதனைகளை ஜெய்ஸ்வால் முறியடிப்பார் என்றால், இந்திய அணி தொடரையும் எளிதாக வெல்லும் என்பது குறிப்பிடத்தக்கது!