ரஷித் கான் வீசிய பந்து ஸ்டம்ப்பில் பட்டும் கீழே விழாத பெயில்ஸ் ; அதிர்ஷ்டவசமாக தப்பித்துக் கொண்ட மேக்ஸ்வெல்

0
80
Glenn Maxwell bails didn't fall down

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 66வது போட்டியில், பெங்களூர் அணி குஜராத் அணியை எதிர்த்து, மும்பையின் வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறது. புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் குஜராத் அணிக்கு இந்த ஆட்டம் எந்தவிதத்திலும் முக்கியமானது இல்லை. ஆனால் பெங்களூர் அணிக்கு இது வாழ்வா சாவா ஆட்டம் ஆகும். தோற்றால் ப்ளே-ஆப்ஸ் வாய்ப்பு முடிவுக்கு வந்துவிடும்!

இந்த நிலையில் இன்றைய போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங்கை தேர்வுசெய்தார். இதன்படி ஆடவந்த சுப்மன் கில் ஆரம்பத்திலேயும், அடுத்த வந்த மேத்யூ வேட் தவறான தீர்ப்பாலும், விர்திமான் சஹா பவர்-ப்ளே முடிந்தும் வெளியேறினார்கள். ஒருமுனையில் நின்ற கேப்டன் ஹர்திக் பாண்ட்யா அரைசதமடிக்க, மில்லர், ரசீத்கான் இறுதிக்கட்டத்தில் நல்ல ஒத்துழைப்பு தர, இருபது ஓவர்களின் முடிவில் குஜராத் அணி 168 ரன்களை எடுத்தது.

- Advertisement -

அடுத்து 169 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய பெங்களூர் அணியின் துவக்க ஜோடி பாஃப்-விராட் ஜோடி 115 ரன்களுக்கு கூட்டணி அமைத்தது. கேப்டன் 38 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். விராட்கோலி 73 ரன்களை 54 பந்துகளில் குவித்து வெளியேறினார்.

இதற்கு நடுவில் கேப்டன் பாஃப் ஆட்டமிழந்து மேக்ஸ்வெல் உள்ளே வந்தார். ஆட்டத்தில் ரசீத்கான் வீசிய 15 ஓவரில், மேக்ஸ்வெல் பேட்டை சுழற்ற, பந்து அவரை ஏமாற்றி, லெக்-ஸ்டைம்பை அடித்து பவுண்டரிக்கும் சென்றது. ஆனால் ஸ்டம்பின் பெயில்ஸ் கீழே விழவில்லை. இதனால் விக்கெட் கிடைக்காமல் போனதோடு, பவுண்டரியும் தரவேண்டியதாய் போய்விட்டது. விக்கெட் என்று கொண்டாடிய ரசீத்கான் கடைசியில் ஏமாற்றமடைந்தார். ராஜஸ்தான் டெல்லி அணிகள் மோதிய போட்டியில், சாஹலின் பந்தில் வார்னருக்கு பந்து ஸ்டம்பில் பட்டு பெயில்ஸ் விழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!