எங்க 2 பேட்ஸ்மேன்.. கோலிக்கு இந்த பிரச்சனையை உண்டாக்கிட்டாங்க.. தப்பிக்க முடியாது – மேத்யூ ஹைடன் பேச்சு

0
145
Hayden

தற்போது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டிஸ் நாடுகளில் நடைபெற்று வரும் 9வது டி20 உலகக்கோப்பை தொடர் விராட் கோலிக்கு ஏமாற்றம் அளிப்பதாக அமைந்திருக்கிறது. முதல் மூன்று போட்டிகளின் சேர்த்து மொத்தமாக அவர் ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இந்த நிலையில் இரண்டாவது சுற்றில் வெஸ்ட் இண்டீஸில் விராட் கோலிக்கு இன்னும் நிலைமைகள் கடினமாகும் என மேத்யூ ஹைடன் கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த 17 வது ஐபிஎல் சீசனில் விராட் கோலி மொத்தம் 15 போட்டிகளில் விளையாடி 741 ரன்கள் குவித்து இருந்தார். மேலும் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 155 என பெரிய அளவில் உயர்ந்திருந்தது. மேலும் சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஸ்லாக் ஸ்வீப் ஷாட்டை ஆட ஆரம்பித்து இருந்தார்.

- Advertisement -

இதன் காரணமாக தற்போதைய டி20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி நிர்வாகம் விராட் கோலியை துவக்க ஆட்டக்காரராக ரோஹித் சர்மாவுடன் களம் இறக்கி வருகிறது. மூன்று பொட்டிகளில் விளையாடி உள்ள விராட் கோலி பவர் பிளேவை தாண்டாதது உடன் மொத்தமாக 5 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார்.

சில கிரிக்கெட் வல்லுனர்கள் சுழல் பந்துவீச்சு சாதகமான மற்றும் மெதுவான ஆடுகளங்களைக் கொண்ட வெஸ்ட் இண்டீஸில் விராட் கோலி வழக்கம் போல் மூன்றாவது இடத்தில் வருவது நல்லது என கூறி வருகிறார்கள். ஆனால் அவரை மூன்றாவது இடத்தில் அனுப்பினால் ரிஷப் பண்ட்டை கீழே இறக்கி பல மாற்றங்களை செய்ய வேண்டியது வரும்.

- Advertisement -

விராட் கோலி குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மேத்யூ ஹைடன் கூறும்பொழுது “உங்கள் பெஞ்ச் மார்க் என்ன? அரைசதமா இல்லை சதமா? இல்லை ஸ்டிரைக் ரேட்டா?இங்கிலாந்துக்கு எதிராக பார்படாஸ் மைதானத்தில் ஹெட் மற்றும் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி ரன்கள் அடித்தார்கள். இதுதான் விராட் கோலிக்கு சவால் விடக்கூடிய விஷயம். அவர் தற்போது வெஸ்ட் இண்டீஸில் எப்படி விளையாடுவார் என்று பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : பயிற்சியாளர் இன்டர்வியூ.. கம்பீரிடம் பிசிசிஐ கேட்ட முக்கியமான 3 கேள்விகள்.. வெளியாகி இருக்கும் புதிய விபரங்கள்

என்னைப் பொறுத்தவரை விராட் கோலி துவக்க ஆட்டக்காரர் ஆகவே களம் இறங்க வேண்டும. தொடக்க ஆட்டக்காரராக அவர் மீது ஏன் இந்திய தேர்வுக்குழு நம்பிக்கை வைத்தது என்பதை அவர் உங்களுக்கு காட்டுவார். அவர் சிறந்த ஸ்ட்ரைக் ரைட்டில் தொடர வேண்டும். வெஸ்ட் இண்டீஸில் நாம் தெளிவாக பார்த்தது, முதல் ஆறு ஓவர்களில் நீங்கள் முன்னிலையில் இருக்க வேண்டும். நீங்கள் ஆட்டத்தை எடுத்துக் கொண்டு செல்கிறீர்கள் என்றால் கடைசி பத்து ஓவர்கள் கடினமாகிவிடும். ஒருவேளை நீங்கள் ஆட்டத்தை நகர்த்தி சென்றால் கடைசி பத்து ஓவர்கள் உங்களுக்கு மிக சிறப்பானதாக அமைய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -