ஆஸி ஜாம்பவானை அணியில் சேர்த்த பாகிஸ்தான்.. செம பிளான் !

0
441
Matthew Hayden

ஐசிசி டி20 உலக கோப்பை தொடருக்காக பல்வேறு அணிகள் தங்களது முன்னேற்பாடு பணிகளை செய்து வருகின்றனர். இதுவரை ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் உலகக் கோப்பை தொடருக்கான தங்களது வீரர்களை அறிவித்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் தற்போது புதிய முடிவு ஒன்றை டி20 உலக கோப்பை தொடராக எடுத்துள்ளது.

- Advertisement -

தற்போது ஆசிய கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு இலங்கையும் பாகிஸ்தானும் மோத உள்ளது. இதில் பாகிஸ்தானுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என கருதப்படுகிறது. ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் வென்றால் அது அந்த அணியின் உத்வேகத்தை மேலும் அதிகரிக்கும். இந்த நிலையில் தான் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமிஸ் ராஜா ஒரு மெர்சல் ஆன அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதாவது வரும் டி20 உலக கோப்பை தொடர் சவால்கள் நிறைந்த ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது.

இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மேத்யூ ஹைடனை வழிகாட்டியாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஒப்பந்தம் செய்துள்ளது. ஏற்கனவே கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக மேத்யூ ஹைடன் உதவி செய்தார்.இதன் மூலம் அரை இறுதி வரை பாகிஸ்தான் அணி சென்றது. தற்போது அதே பணிக்காக ஹைடன் பாகிஸ்தான் அணிக்கு திரும்பியுள்ளார். வரும் அக்டோபர் 15ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் ஹைடன் இணைந்து வீரர்களுக்கு வழிகாட்டியாக ஆலோசனை வழங்குவார்.

இதேபோன்று தென்னாப்பிரிக்கா வேகப்பந்துவீச்சாளர் வெர்னன் பிலாண்டரை மீண்டும் பந்துவீச்சு ஆலோசராக பாகிஸ்தான அணி நியமித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாக். கிரிக்கெட் வாரியத் தலைவர் ரமிஸ் ராஜா , மேத்யூ ஹைடன் பாகிஸ்தான் அணிக்காக திரும்புவது மகிழ்ச்சி அளிக்கிறது. தனது திறமையை கடந்த முறையே அவர் நிரூபித்துள்ளார் ஆஸ்திரேலிய களத்தில் எப்படி விளையாட வேண்டும் என்ற அறிவு மற்றும் அனுபவம் அவருக்கு நிறையவே உள்ளது. இது பாகிஸ்தான் அணிக்கு நல்ல சாதகமாக அமையும் என்று கூறியுள்ளார். பாகிஸ்தானுடன் மீண்டும் இணைவது மகிழ்ச்சி அளிப்பதாக ஹைடன் குறிப்பிட்டுள்ளார்

- Advertisement -