கங்குலி செலக்ட் செய்த உலக கோப்பைக்கான மாஸான இந்திய அணி.. திலக் வர்மா சஞ்சு சாம்சனுக்கு இடம் இல்லை!

0
13755
Ganguly

இந்திய அணியின் முன்னாள் கேப்டன், இந்திய கிரிக்கெட் வாரிய முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி இந்தியாவில் நடைபெற இருக்கின்ற உலகக்கோப்பைக்கான தன்னுடைய 15 பேர் கொண்ட அணியை தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார்!

ஆசியக் கோப்பைக்கு இந்திய கிரிக்கெட் தேர்வு குழு வெளியிட்ட 17 பேர் கொண்ட அணியிலிருந்து இவரது அணி இறுதி செய்யப்பட்ட அணியாக இருக்கிறது. தன்னுடைய அணித்தேர்வு குறித்து அவர் தனது கருத்தையும் முன்வைத்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

தனது அணியை வெளியிடுவதற்கு முன்பாக பேசிய அவர் “அக்சர் படேலை அவர் பேட்டிங் செய்யும் திறன் காரணமாக சாஹலுக்கு முன்னே தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள். எனவே இது ஒரு நல்ல தேர்வு என்று நான் நினைக்கிறேன். யாராவது காயம் அடைந்தால் சாஹல் அணிக்குள் வர முடியும். இது 17 பேர் கொண்ட அணி எப்படியும் இரண்டு பேரை வெளியேற்றி ஆகவேண்டும்.

பேட்டர்களில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டால் திலக் வர்மா அவரது இடத்தில் உள்ளே வர முடியும். வேகப் பந்துவீச்சாளர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் பிரசித் கிருஷ்ணா உள்ளே வருவார். இதுபோலவே சுழற் பந்துவீச்சாளர்களில் யாருக்கேனும் காயம் ஏற்பட்டால் சாஹல் வருவார்” என்று கூறியிருக்கிறார்!

கங்குலி தன்னுடைய அணியில் பிரதான பேட்ஸ்மேன்களாக கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூரியகுமார் ஆகியோரை வைத்திருக்கிறார். விக்கெட் கீப்பர்களாக இசான் கிஷான் மற்றும் கே.எல் ராகுல் இருக்கிறார்கள்.

- Advertisement -

மேலும் தன்னுடைய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக ஹர்திக் பாண்டியா மற்றும் சர்துல் தாக்கூரை தொடர்ந்திருக்கிறார். சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்சர் படேல் இருவரும் இருக்கிறார்கள்.

இவரது அணியில் பிரதான சுழற் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவ் இருக்கிறார். வேகப்பந்துவீச்சாளர்களாக ஜஸ்ப்ரீத் பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ் மூவரும் இருக்கிறார்கள்.

சவுரவ் கங்குலியின் இந்திய ஒருநாள் உலகக் கோப்பை 2023 அணி:

ரோஹித் சர்மா, சுப்மான் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாக்கூர்.