இன்று ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்கு எதிராக லக்னோ அணியின் துவக்க ஆட்டக்காரர் மிட்சல் மார்ஸ் சதம் அடித்து இனி ஐபிஎல் தொடரில் மற்றவர்கள் செய்வதற்கு வாய்ப்பு குறைவான சாதனையை படைத்திருக்கிறார்.
இந்த போட்டியை வென்றால் புள்ளி பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் தொடர முடியும் என்கின்ற நிலையில் குஜராத் காலம் இறங்கியது. அதே சமயத்தில் பிளே ஆப் வாய்ப்பில் இருந்து வெளியேறிவிட்ட லக்னோ அணி நல்ல நம்பிக்கையை பெறுவதற்காக கடைசி கட்ட வெற்றி களுக்காக விளையாட வந்தது.
நொறுக்கி தள்ளிய மிட்சல் மார்ஸ்
முதலில் பேட்டிங் செய்ய வந்த லக்னோ அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் இருவருமே அதிரடியான துவக்கத்தை கொடுத்தார்கள். லக்னோ அணிக்கு முதல் விக்கெட்டுக்கு 59 பந்துகளில் 91 ரன்கள் வந்தது. சிறப்பாக விளையாடிய எய்டன் மார்க்ரம் 24 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்த முறை பூரன் களம் இறங்கினார். ஒரு முனையில் நிலைத்து நின்று விளையாடிய மிட்சல் மார்ஸ் அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்ததுடன் 56 பந்தில் தனது முதல் ஐபிஎல் சதத்தையும் அடித்து அசத்தினார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் 500 ரன்கள் தாண்டி எடுத்தவர்கள் பட்டியலிலும் இணைந்தார்.

மார்ஸ் குடும்பத்தின் சாதனை
மேலும் அவரது இந்த சதத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் சதம் அடித்த ஒரே சகோதரர்கள் என்ற சாதனையையும் படைக்க காரணமாக இருந்தார். ஏற்கனவே ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஷான் மார்க்ஸ் சதம் அடித்திருக்கிறார். தற்பொழுது லக்னோ அணிக்காக மிச்சல் மார் சதம் அடித்து இந்த சாதனையை படைத்திருக்கிறார்.
இதையும் படிங்க : என் மேல என்னதான் வன்மம்.. அப்படி மோசமான செய்திய பத்திரிக்கையாளர் வெளியிட்டது ஏன்? – ரிஷப் பண்ட் கோபம்
இறுதியில் மிட்சல் மார்ஸ் 64 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்கள் உடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதி வரை களத்தில் இருந்த பூரன் 27 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களுடன் 56 ரன்கள், ரிஷப் பண்ட் ஆறு பந்தில் இரண்டு சிக்ஸர் உடன் 15 ரன்கள் எடுத்தார்கள். லக்னோ அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்து இருக்கிறது.