வீடியோ; அடுத்தடுத்த பந்தில் அதிவேகத்தில் ப்ரீத்வி மார்ஸை அனுப்பி வைத்த மார்க் வுட்!

0
105
Ipl2023

16ஆவது ஐபிஎல் சீசன் மூன்றாவது ஆட்டம் இன்று லக்னோ மைதானத்தில் லக்னோ ஜெயின்ட்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே தற்பொழுது நடைபெற்று வருகிறது!

இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். சொந்த நாட்டுக்காக விளையாடுவதால் குயின் டி காக் லக்னோ அணியில் இடம் பெறவில்லை. இதே காரணத்தால் டெல்லி அணிக்கு அன்றிச் நோர்க்கியாவும் இடம்பெறவில்லை.

- Advertisement -

லக்னோ அணிக்கு துவக்கம் தர அந்த அணியின் கேப்டன் கே எல் ராகுல் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கையில் மேயர்ஸ் இருவரும் களம் புகுந்தார்கள். பேட்டிங்கில் தடுமாறிய கேஎல் ராகுல் 12 பந்தில் எட்டு ரன்கள் எடுத்து வெளியேறினார்.

இதற்கடுத்து தீபக் ஹூடா மேயர்ஸ் உடன் கைகோர்த்தார். இருவரும் அதிரடியாக விளையாட லக்னோ ஸ்கோர் உயரத் தொடங்கியது. ஆரம்ப நிலையில் மேயர்ஸ் தந்த எளிமையான கேட்சை டெல்லி அணியின் வீரர் கலீல் அகமது தவறவிட அதற்கு மேல் அவர் ருத்ர தாண்டவம் ஆட ஆரம்பித்தார்.

வெறும் 38 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் இரண்டு பவுண்டரி மற்றும் 7 சிக்ஸர்கள் உடன் 73 ரன்கள் எடுத்து அசத்தினார். இதற்கு அடுத்து இன்னொரு வெஸ்ட் இண்டீஸ் வீரர் நிக்கோலஸ் பூரன் 21 பந்துகளில் 36 ரன்கள் எடுக்க, லக்னோ அணி பேட்டிங் செய்ய கொஞ்சம் கடுமையான ஆடுகளத்தில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து டெல்லி அணிக்கு துவக்கம் தர கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பிருத்திவி ஷா இருவரும் வர ரன்கள் நல்லவிதமாக வரத் தொடங்கியது. இதனால் டெல்லி அணியின் ஸ்கோர் வேகமாக எகிறியது.

இந்த நிலையில் ஐந்தாவது ஓவரை வீச வந்த இங்கிலாந்து அணியின் அதிவேக பந்துவீச்சாளர் மார்க் வுட் ஒரு பவுன்சரை பிருதிவி ஷாக்கு வீசி, அடுத்த பந்தை ஸ்டெம்புக்கு வீசி கிளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றினார். பின்பு அடுத்து வந்த ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் மிட்சல் மார்சையும் அதே போல் ஆட்டம் இழக்க வைத்து உடனே வெளியேற்றினார். அவரது அதிவேக பந்துவீச்சை கணிக்க முடியாமல் இருவரும் தங்களது விக்கட்டை பரிதாபமாக பறித்து கொடுத்தார்கள். இதற்கான வீடியோ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது!