நாளை இந்தியா தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையே துவங்க இருக்கும் டெஸ்ட் தொடரின் முதல் போட்டிக்கு முன்பாக, குறிப்பிட்ட இந்திய வீரருக்கு எதிராக தென் ஆப்பிரிக்க அணி ஹோம் ஒர்க் செய்து கொண்டு வர வேண்டும் என மார்க் பவுச்சர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இந்தியா தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை நடைபெற இருக்கிறது. இந்த போட்டி இந்தியாவின் வரலாற்று சிறப்புமிக்க கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்க இருக்கிறது. தற்போது தென் ஆப்பிரிக்கா உலக சாம்பியன் ஆக இருப்பதும், இந்திய அணி இளம் அணியாக இருப்பதும் எதிர்பார்ப்புகளை அதிகரித்திருக்கிறது.
இந்திய அணியின் பேட்டிங் யூனிட் இளமையானதாக இருந்தாலும் கூட தைரியமானதாகவும் அதே சமயத்தில் புத்திசாலித்தனமானதாகவும் இருக்கிறது. இந்த காரணத்தினால் இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வைத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் சமன் செய்து அசத்தியது.
மேலும் இந்திய அணியின் பௌலிங் யூனிட்டில் அனைவருமே நல்ல அனுபவம் பெற்றவர்களாக இருக்கிறார்கள். மேலும் இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவது முக்கியமான பலமாகவும் அமைந்திருக்கிறது. இத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயமடைந்த ரிஷப் பண்ட் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியிருக்கிறார்.
இதுகுறித்து மார்க் பவுச்சர் பேசும்பொழுது “இந்திய அணியில் ரிஷப் பண்ட் மிகவும் ஆபத்தானவர். அவர் சில மணி நேரங்களில் போட்டியை மாற்றி இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். தென் ஆப்பிரிக்க அணி இதை அறிந்து கொள்ளும். அவர்கள் அவருக்கு எதிராக தயாராக இருக்க வேண்டும். மேலும் அவர்கள் புத்திசாலியாக இருந்தால் அவருடைய உணர்வுடன் கொஞ்சம் மோத வேண்டும். அவர் என்ன செய்ய விரும்புகிறார்? எப்படி ஆதிக்கம் செலுத்த விரும்புகிறார்? என்பதை புரிந்து கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க : எங்க டீம்ல இந்த 31 வயசு வீரர் கிட்ட.. எல்லாரும் மரியாதையா இருப்போம்.. அவர் அமிதாப் மாதிரி – ஜிதேஷ் சர்மா கருத்து
“ரிஷப் பண்டுக்கு இரண்டு பவுண்டரி பீல்டர்களை அனுப்பி பவுண்டரி அடிக்க விடாமல் தடுப்பது தற்காப்பு ஆட்டமாகத்தான் இருக்கும். அவர் இந்த மாதிரி ஆட்டம் விளையாடாமல் கிடையாது. அவர் விரும்புவது என்னவென்றால் ஸ்கோர் போர்டு நகர்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதுதான். எனவே அவரை ரன் எடுக்க விடாமல் குறிப்பிட்ட நேரம் செய்ய வேண்டும். அவரை விரக்தி அடைய வைக்க வேண்டும். இதற்கு தென் ஆப்பிரிக்க அணி ஹோம் வொர்க் செய்து ஆட்டத்திற்கு வர வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.