இந்திய கிரிக்கெட்

கம்பீரை கோச் பொறுப்புல இருந்து தூக்க போறாங்க.. ஆனா அடுத்து இவரைக் கொண்டு வரதுதான் சரியானது – மனோஜ் திவாரி பேச்சு

2026 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரை இந்திய அணி வெல்லாவிட்டால் பிசிசிஐ கம்பீரை பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து நீக்கிவிடும் என இந்திய முன்னாள் வீரர் மனோஜ் திவாரி கூறியிருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளர் பொறுப்புக்கு வந்ததற்கு பிறகு சாம்பியன்ஸ் தொடரை வென்று இருக்கிறது. மேலும் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை டிரா செய்து வந்திருக்கிறது. ஆனால் உள்நாட்டில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் வரலாற்று தோல்விகளை அடைந்திருக்கிறது. எனவே அவர் மீது நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன.

கடினமான முடிவை எடுக்க வேண்டும்

இதுகுறித்து மனோஜ் திவாரி பேசும்பொழுது “இந்திய அணி டி20 உலக கோப்பையை இல்லாவிட்டால் தொடர்ந்து கம்பீர் பயிற்சியாளராக இருக்கக் கூடாது. இது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஒரு கடினமான முடிவை எடுக்க வேண்டும். கம்பீர் தனது ஒப்பந்தம் முடியும் வரையில் பொறுப்பில் இருப்பார் என பிசிசிஐ செயலாளர் கூறியிருந்தார். ஆனால் அப்படி இருக்கக் கூடாது”

“நான் மிக உறுதியாக நம்புகிறேன். இந்திய அணி டி20 உலக கோப்பையை வெில்லாவிட்டால் இந்திய கிரிக்கெட் வாரியம் கம்பீரை பொறுப்பில் வைத்திருக்காது. அவரை நீக்கிவிடும் என்று நம்புகிறேன்”

- Advertisement -

இவரைக் கொண்டு வர வேண்டும்

“அடுத்த பயிற்சியாளரை தேர்வு செய்வது ஒரு செயல்முறை சார்ந்த விஷயமாக இருக்க வேண்டும். ராகுல் டிராவிட் பயிற்சியாளராக இருந்த காலத்தில் இடையில் சில தொடர்களுக்கு லட்சுமணன் பயிற்சியாளராக வெளியே செல்வார். எனவே அவர் அடுத்த பயிற்சியாளராக வருவதற்கான தேர்வில் இயல்பாக இருந்தார் “

இதையும் படிங்க : கிறிஸ் கெயில் கூட இந்த விஷயத்தில் நிதானமாய் இருப்பாரு.. ஆனா அபிஷேக் ஷர்மா வேற மாதிரி இருக்கார் – முகமது கைஃப்

“லட்சுமணன் ஒரு நல்ல மனிதர். அவரை மீண்டும் பொறுப்புக் கொண்டு வருவதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பேச வேண்டும். அவருக்கு பயிற்சி பொறுப்பில் அனுபவமும் இருக்கிறது. எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் பேசி அவரை சம்மதிக்க வைக்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by