இந்திய கிரிக்கெட்

இல்லாததே கிடையாது.. இந்தப் பையன் கிரிக்கெட்டுக்கு கடவுள் கொடுத்த பரிசு – மனோஜ் திவாரி பாராட்டு

இந்திய அணியின் முன்னாள் வீரர் மனோஜ் திவாரி இந்திய அணியின் தற்போதைய இளம் வீரர் ஒருவரை கடவுள் கிரிக்கெட்டுக்கு கொடுத்த பரிசு என பெரிய அளவில் புகழ்ந்து பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரது பேட்டிங் ஃபார்ம் மிகவும் கவலை அளிப்பதாக இருந்து வருகிறது. சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெற்ற இவர்கள் இருவரும் அடுத்து சீக்கிரத்தில் ஓய்வு குறித்து முடிவெடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

எதிர்கால இந்திய அணியின் வீரர்கள்

தற்போது இந்திய அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கை அளிக்கக்கூடிய இளம் வீரர்களாக ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட் ஆகியோர் பேட்டிங்கில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் நம்பிக்கை அளிக்க கூடியவர்களாக இருக்கிறார்கள். மேலும் துருவ் ஜுரல், சர்பராஸ் கான், சஞ்சு சாம்சன், ரியான் பராக், ரிங்கு சிங் போன்றவர்களும் சிறப்பாக இருக்கிறார்கள்.

மேலும் ஹர்திக் பாண்டியா இடத்திற்கு நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ரமன்தீப் சிங் என வேகமாக மாற்று வீரர்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறார்கள். இந்த வகையில் புதிய இந்திய அணிகள் எல்லா வடிவத்திற்கும் மிக வேகமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

- Advertisement -

இவர் கடவுள் கிரிக்கெட்டுக்கு கொடுத்த பரிசு

இதுகுறித்து மனோஜ் திவாரி பேசும் பொழுது ” ஜெய்ஸ்வால் தயாரிப்பில் ஒரு ஜாம்பவானாக இருக்கிறார். நான் அவரை மிகவும் உயர்வாக மதிப்படுகிறேன். ஒரு சிறந்த பெரிய கிரிக்கெட் வீரராக வருவதற்கு தேவையான எல்லாமே அவருக்கு இருக்கிறது. எனவே இந்தச் சிறுவயதிலேயே அவர் திறமை குறித்து நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது”

“அவரிடம் நல்ல நுட்பம் இருக்கிறது. மேலும் ரன்கள் எடுக்க வேண்டும் என்ற பசி இருக்கிறது. ஒவ்வொரு போட்டியிலும் தொடர்ந்து முன்னேறி செல்ல விரும்புகிறார். அவர் எதிரில் இருப்பது எந்த அணியாக இருந்தாலும் எந்த பந்துவீச்சாளராக இருந்தாலும் ஆதிக்கம் செலுத்த முற்படுகிறார். உங்களிடம் நல்ல நுட்பம் மற்றும் ஷாட் இருந்தால் மட்டுமே நீங்கள் அதிகம் செலுத்த முடியும்”

இதையும் படிங்க : கோலி என்னை இன்ஸ்டாகிராமில் பிளாக் செய்திருந்தார்.. ஆர்சிபி-யில் தான் காரணம் தெரிந்தது – மேக்ஸ்வெல் பேட்டி

“புனே மைதானத்தில் இருந்த ஆடுகளத்தில் மற்ற சிறந்த வீரர்களை பார்க்கும்பொழுது அவர்களால் பெரிய ரன்கள் எடுக்க முடியவில்லை. ஆனால் ஜெய்ஸ்வால் இந்த சிறிய வயதில் மிகச் சிறப்பாக விளையாடி ரன்கள் எடுத்தார். உண்மையில் அவர் கிரிக்கெட்டுக்கு கடவுள் கொடுத்த பரிசு” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts