கம்பீர் கங்குலியை திட்டியதை அவரிடம் சொன்னேன்.. அவர் இதைத்தான் சொன்னார் – மனோஜ் திவாரி பேட்டி

0
349
Manoj

ரஞ்சி போட்டியின் போது கங்குலியை கம்பீர திட்டியது குறித்து அவரிடம் தெரிவித்ததாகவும், அதற்கு கங்குலி என்ன பதில் அளித்தார்? என்பது குறித்தும் மனோஜ் திவாரி பேசியிருக்கிறார்.

கம்பீர் மற்றும் மனோஜ் திவாரி இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடினார்கள். அப்போது இருவருக்கும் இடையே பிரச்சனை உருவானது. பிறகு அது வெளியில் ரஞ்சி போட்டியின் போது மைதானத்திலும் தொடர்ந்து பெரிய சர்ச்சையானது. அந்த நேரத்தில் கம்பீர் அந்த பிரச்சினையை எப்படி ஆரம்பித்தார் என்று மனோஜ் திவாரி கூறியிருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் கங்குலியை இப்படி திட்டினார்

இதுகுறித்து மனோஜ் திவாரி பேசும்பொழுது “கம்பீர் தொடர்ந்து துஷ்பிரயோகம் செய்து கொண்டு இருந்த சமயத்தில், கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்கத்தின் பொறுப்பில் சேர்ந்தார் என்று நான் நினைக்கிறேன். அவர் கங்குலியை பற்றியும் கேவலமாக பேசினார். அவர் தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி பதவிக்கு வந்திருப்பதாகவும், நீயும் அப்படித்தான் வந்திருக்கிறாயா? என்றும் திட்டினார்”

“நான் இதை தாதாவிடம் தெரிவித்த பொழுது, அவர் பரவாயில்லை இருக்கட்டும் விட்டுவிடு என்று கூறினார். நான் இதை அவரிடம் தெரிவிக்க வேண்டியது என்னுடைய கடமையாக இருந்தது. கம்பீருக்கு கோபம் ஒரு பிரச்சினையாக இருப்பதை நாம் பார்த்து வருகிறோம். நாங்கள் அதற்குப் பிறகு சந்திக்கவும் பேசுவதற்கோ வாய்ப்பு இல்லை”

- Advertisement -

இப்படி ஒருவர் திட்டி பார்த்ததில்லை

“கம்பீர் போல அவதூறாக திட்டி நான் யாரையும் பார்த்ததில்லை. ஒருவர் உங்கள் அம்மா பற்றி தவறாக பேசும் பொழுது அதை பொறுத்துக் கொள்ளத் தேவையில்லை. மேலும் அவதூறுகளை பொறுமையாக டீல் செய்யும் ஆள் நான் கிடையாது. நான் அவரிடம் “கௌதி பாய் ஏன் இப்படி பேசுகிறீர்கள்? மாலையில் என்னை சந்தியுங்கள்” என்று கூறினேன். எந்த ஒரு வீரரும் என்னிடம் அப்படி பேசியதில்லை. அவருடைய வாயிலிருந்து வந்த எந்த வார்த்தைகளையும் இதற்கு முன் அங்கிருந்த ஊடகவியலாளர்களும் கேட்டு இருக்க மாட்டார்கள்”

இதையும் படிங்க : 47-7 டு 120.. நான் மத்தவங்க மாதிரி கிடையாது.. அகர்கர் கொஞ்சம் இத பார்க்கணும் – சர்துல் தாக்கூர் பேட்டி

“இந்தப் பிரச்சினை என்பது நடுவில் நடுவர் வந்தார். கம்பீர் அவரையும் பிடித்து தள்ளி விட்டார். நடுவரால் அதற்கு மேல் எதுவும் செய்ய முடியாது. ஏனென்றால் கம்பீர் பெரிய வீரர் அவருக்கு நிறைய செல்வாக்கு இருக்கிறது. சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து அவர் என்னை திட்ட ஆரம்பித்தார். நடுவர்கள் அமைதியாக இருந்தனர். ஏனென்றால் அவருடைய செல்வாக்கால் அவர்களுக்கு பிரச்சனை வரும் என்று அவர்கள் நினைத்தார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -