இங்கி டெஸ்ட் தொடரின் தலையெழுத்த.. இந்த தமிழ்நாட்டு பையன் மாத்துவார்.. சவாலான ஆளு – பனேசர் உறுதி

0
97
Panesar

நாளை மறுநாள் தொடங்க இருக்கும் இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் மிகச் சிறப்பாக செயல்படக்கூடிய வீரர்கள் யாராக இருப்பார்கள் என்பது குறித்து இங்கிலாந்து முன்னால் சுழல் பந்துவீச்சாளர் மான்டி பனேசர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாளை லீட்ஸ் ஹெட்டிங்லி மைதானத்தில் மதியம் மூன்று முப்பது மணிக்கு தொடங்குகிறது.

- Advertisement -

திருப்புமுனை நட்சத்திரம்

இதுகுறித்து மான்டி பனேசர் பேசும் பொழுது ” இந்த சுற்றுப்பயணத்தில் திருப்புமுனை நட்சத்திரமாக மாறக்கூடிய வீரராக சாய் சுதர்சன் இருப்பார். அவர் இங்கிலாந்து கவுண்டி சர்ரே அணிக்காக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். மேலும் அவர் இங்கிலாந்து பந்துவீச்சாளர்களை சவால் செய்யும் குணத்தை கொண்டவராக இருக்கிறார்”

“மேலும் சர்துல் தாக்கூருக்கு இது மிகப்பெரிய தொடராக இருக்கும் என்று நினைக்கிறேன். வெளிநாட்டு டெஸ்ட் தொடர்களில் சிக்கனமாகவும் அதே நேரத்தில் விக்கெட் கைப்பற்ற கூடிய விருப்பத்தை அவர் இரண்டாவது பவுலராக கொடுக்கிறார். அவருடைய இயல்பான ரோலாக இது இருக்கிறது. எனவே இது அவருக்கும் ஒரு முக்கிய சுற்றுப்பயணமாக இருக்கும் என்று நினைக்கிறேன்”

- Advertisement -

கருண் நாயர் முக்கியமானவர்

” கருண் நாயருக்கு இது மிகப்பெரிய தொடராக இருக்கும். அவர் மூன்று அல்லது நான்காவது இடத்தில் சிறப்பாக விளையாடி தனக்கென்று ஒரு இடத்தை உருவாக்க வேண்டும். அவர் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறப்பானவராக இருக்கிறார். ஆனால் இது நம்பிக்கை சம்பந்தப்பட்டது. அவர் தன்னம்பிக்கையுடன் செயல்பட வேண்டும். இந்த டெஸ்ட் மேடையை ரசித்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க : 2023ல ஜெய்ஸ்வால் ஷமி சிராஜ தைரியமா கூப்ட பையன்.. இங்கிலாந்துல 4 வகையில ஆடி அசத்துவார் – ராகுல் டிராவிட் நம்பிக்கை

“ஒருபுறம் கேஎல்.ராகுல் நங்கூரமாக இருக்கப் போகிறார். இந்திய அணி சிக்கலில் இருக்கும் பொழுது அவர்தான் அணியை நிலை நிறுத்துவார். அவர் நீண்ட நேரம் பேட்டிங் செய்யக் கூடியவர். அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் அவரைச் சுற்றி விளையாடலாம். இந்த வகையில் தற்போது அவர் புஜாராவை போன்றவர்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -