13 வருடத்திற்கு பிறகு தல தோனியும் தளபதி விஜய்யும் சந்திப்பு

0
109
Thala Dhoni and Thalapathy Vijay

நம் நாட்டில் கிரிக்கெட்டுக்கும் சினிமாவிற்கும் ரசிகர் பட்டாளம் மிகவும் அதிகம். இரண்டையும் திருவிழா போல் கொண்டாடித் தீர்திதுவிடுவர். அவர்கள் இருவரும் மேலும் சந்தோசம் அடையும் வகையில் இன்று ஓர் சிறப்பான நிகழ்வு நடந்தது. அது சமூக வலைதளங்கள் முழுவதும் காட்டுத்தீ போல வேகமாக பரவத் தொடங்கியது.

இன்று மதியம் 1 மணி அளவில், கோகுலம் ஸ்டூடியோவில் இரு பிரபல ஜாம்பவான்கள் சந்தித்து பேசினர். தமிழ் திரையுலகின் இளையதளபதி விஜய்யும் இந்திய முன்னாள் கேப்டன் தல தோனியும் எதிர்பாராத வகையில் இன்று சந்தித்தனர்.

- Advertisement -

பீஸ்ட் திரைப்படத்தின் ஷூட்டிங்கும் தோனி நடிக்கும் விளம்பரப் படத்தின் ஷூட்டிங்கும் சென்னையில் நடைபெற்று வருகிறது. அப்போது தான் இருவரும் சந்தித்து ஒரு சில நிமிடங்கள் பேசினர். கேப்டன் தோனி கருப்பு டி – ஷர்ட்டும் நடிகர் விஜய் கருப்பு ஷர்ட்டும் அணிந்திருந்தனர். இருவரின் தோற்றத்திற்கும் அவர்களது வயதிற்கும் சம்மந்தம் இல்லை என்றே கூறலாம்.

தளபதி விஜய்யும் தல தோனியும் இரண்டு மூன்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டனர். அப்புகைபடங்கள் வெளிவந்த ஓரிரு நிமிடங்களிலேயே, சமூக வலைதளங்கள் முழுவதும் ‘ தல – தளபதி ‘ என்ற ஹாஸ்டாகில் வைரலாகத் தொடங்கியது. முதலில் வெளிவந்த இரண்டு புகைப்படங்களையும் ரசிகர்கள், தங்களது ஃப்ரோபைல் ஃபோட்டோவாக வைத்து அழகு பார்த்தனர்.

அதன் பின்னர் விஜய்யும் தோனியும் கேரவன் விட்டு வெளிய வந்தனர். இருவரும் பேசிக்கொண்டே சிறிது தூரம் நடந்து சென்றனர். அவர்கள் நடந்து சென்றது கூட சமூக வலைதளங்களில் அதிகம் பகிறப்பட்டது. பிறகு, கைகுலுக்கிவிட்டு இருவரும் அவர்களது பாதையில் சென்றனர். தளபதி விஜய், தான் நடிக்கும் பீஸ்ட் படத்திற்கான ஷூட்டிங்கிற்கு சென்றார். தல தோனி, தன்னுடைய விளம்பரப் படத்திற்கு சென்றார் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

13 வருடத்திற்கு பிறகு

உண்மையில் சொல்லப்போனால், எதிர்பார்க்காத வகையில் தான் இன்று விஜய்யும் தோனியும் சந்தித்தனர். இதற்கு முன் இவர்கள் இருவரும் ஐ.பி.எல் விழாவின் பொழுது சந்தித்தனர். அதன் பின்னர், இப்பொழுது தான் நேரில் பார்த்துக் கொள்கின்றனர். இந்த 13 வருடத்தில் அவர்களது தோற்றம் சிறிதும் மாறவில்லை. அன்று பார்த்தது போல் தான் இன்றும் உள்ளனர் என்று அனைவரும் டிவிட்டரில் டுவீட் செய்தனர்.

Dhoni and Vijay

விளம்பரப்பட ஷூட்டிங் முடிந்த பிறகு கேப்டன் தோனி, ஐ.பி.எல் போட்டி பயிற்ச்சிக்காக ஐக்கிய அரபு நாட்டிற்க்கு செல்லவிருக்கிறார். ஏற்கனவே, சுரேஷ் ரெய்னா, ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் சில வீரர்கள் சென்றுவிட்டனர். விரைவில் கேப்டன் தோனியும் அவர்களுடன் சேர்ந்து கொள்வார்.