கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

மகேந்திர சிங் தோனியை வெறுப்பவர்கள் பிசாசாகத்தான் இருப்பார்கள் – ஹர்திக் பாண்டியா அதிரடி பேச்சு!

ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் லீக் சுற்றுகள் முடிவடைந்து பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் நான்கு அணிகள் யார் யார் என்று முடிவானது.

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடரில் கடந்த ஆண்டு போலவே குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்து, புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டெல்லியில் டெல்லி கேப்பிட்டல் அணியை எதிர்த்து விளையாடிய ஆட்டத்தில் வெற்றி பெற்றது மூலம் 17 புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தது.

மூன்றாவது இடத்தை லக்னோ அணியும் நான்காவது இடத்தை மும்பை அணியும் பிடித்தன. குஜராத் அணி உடனான தனது கடைசி லீக் போட்டியில் தோல்வி அடைந்த பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைய முடியாமல் பரிதாபமாக வெளியேறியது.

- Advertisement -

இன்று பிளே ஆப் சுற்றில் இறுதிப் போட்டிக்குச் செல்வதற்கான குவாலிபயர் சுற்றில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோத உள்ளன.

மகேந்திர சிங் தோனி தன்னுடைய கிரிக்கெட் கேரியரில் இறுதிக்காலத்தில் இருக்கிறார் என்பதாலும், அவர் அங்கம் வகிக்கும் சென்னை அணி பிளே ஆப் சுற்றில் தன் சொந்த மைதானத்தில் விளையாடுகிறது என்பதாலும் இந்தப் போட்டிக்கு ரசிகர்களிடையே இருக்கும் எதிர்பார்ப்பும் ஆர்வமும் அவருடன் இணைந்து விளையாடிய விளையாடும் வீரர்களிடமும் இருக்கிறது.

மகேந்திர சிங் தோனி குறித்து குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேசும்பொழுது ” நான் எப்பொழுதும் மகேந்திர சிங் தோனியின் ரசிகன். அவர் எனக்கு அன்பான நண்பர் மற்றும் சகோதரர். மகேந்திர சிங் தோனியை போன்ற ஒருவரை வெறுக்க நீங்கள் பிசாசாக இருக்க வேண்டும்!” என்று கூறியிருக்கிறார்.

மேலும் மகேந்திர சிங் தோனி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ரகானே கூறும்பொழுது ” சேப்பாக்கத்தில் மீண்டும் பிளே ஆப் சுற்றில் விளையாடுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். எம் எஸ் தோனி என்கின்ற பெயரால்தான் எங்களுக்கு எல்லா ஆதரவும் கிடைத்தது!” என்று கூறியிருக்கிறார்!

Published by