ஐபிஎல் கிரிக்கெட் விழா இன்னும் சில தினங்களில் நடைபெற உள்ள நிலையில் கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான் செய்த தவறு குறித்து சில முக்கிய விஷயங்கள் பகிர்ந்துள்ளார்.
சிஎஸ்கே முன்னாள் கேப்டன்
‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி இந்திய அணிக்காகவும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் பல போட்டிகளை கேப்டனாக இருந்து வென்று கொடுத்திருக்கிறார். மூன்று ஐசிசி தொடர்களை வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற பெருமையையும், ஐந்து ஐபிஎல் பட்டங்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தோனி வென்று கொடுத்துள்ளார். எப்போதுமே களத்தில் அமைதியை நிலைநாட்டும் தோனி, கோபப்படுவது எப்போதாவது அரிதாக நடக்க கூடிய விஷயமாகும்.
தன் திட்டத்தில் மட்டுமே கவனமாக இருக்கும் தோனி பெரும்பாலும் வீரர்களிடம் தன் கோபத்தை வெளிப்படுத்துவதை அரிதாகவே வைத்திருப்பார். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி, ஐபிஎல் குறித்து சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். செய்தியாளர் கேட்ட கேள்விகளுக்கு பல பதில்களை நேரடியாகவே பேசி இருக்கிறார்.
தான் செய்தது பெரிய தவறு
இது குறித்து தோனி கூறும்போது “நீங்கள் எப்போதாவது பொறுமையை இழந்து உள்ளீர்களா? என்று என்னிடம் கேட்கிறீர்கள். ஆமாம் பலமுறை நான் எனது பொறுமையை இழந்திருக்கிறேன். அதில் ஐபிஎல் போட்டியின் போது நான் அவுட் ஆகி வெளியேறிய பிறகும் மைதானத்திற்குள் ஏதோ விஷயத்திற்காக உள்ளே நடந்து சென்றேன். அப்படி செய்திருக்கக் கூடாது அது என்னுடைய பெரிய தவறு” என்று மகேந்திர சிங் தோனி பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க:இதுல கோட்டை விட்டீங்களே பாஸ்.. மத்த டீம் மாதிரி.. சன்ரைசர்ஸ் இதுல ஸ்ட்ராங் இல்ல – ஆகாஷ் சோப்ரா
தோனி ஒருமுறை ராஜஸ்தான் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது சிஎஸ்கே பேட்ஸ்மேனுக்கு நடுவர் நோ- பால் வழங்கத் தவறியதால் பொறுமை இழந்த தோனி அப்போது மைதானத்திற்குள் சென்று நடுவர் இடையே வாக்குவாதம் செய்தார். அந்த சம்பவத்தையே நினைவு கூர்ந்து பேசி இருக்கும் தோனி தான் அவ்வாறு செய்திருக்கக் கூடாது அது என்னுடைய மிகப்பெரிய தவறு என்று பேசியிருக்கிறார். இந்த ஐபிஎல் தொடர் மகேந்திர சிங் தோனிக்கு கடைசி வருடமாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு தோனிக்கு மற்ற ஆண்டுகளை விட பெரிய அளவில் வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






