இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தனக்கு விளம்பரங்களை ஏற்படுத்திக்கொள்ள தனிப்பட்ட ஆட்களை வேலைக்கு வைத்துக் கொள்வதில் விருப்பமில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
கிரிக்கெட் உலகில் பொதுவாக மகேந்திர சிங் தோனி வெளியில் வருவதை தவிர்க்கக் கூடியவராகவும், மற்றவர்களுடன் அதிகமாக தொடர்பில் இருப்பதை தவிர்ப்பவராகவும், சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்பு ஒரு முறை தனியார் நிகழ்ச்சிகள் கலந்து கொண்டு இருந்த மகேந்திர சிங் தோனி ட்விட்டர் போன்ற தளங்களில் குறைந்த வார்த்தைகளில் மட்டுமே எழுத முடியும் எனவும், அது அவரவர் தேவைக்கு ஏற்ப புரிந்து கொள்ளப்பட்டு, தவறாக சித்தரிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் எனவும், எனவே தனக்கு அதில் ஆர்வம் இல்லை என்றும் கூறியிருந்தார்.
மேலும் இன்ஸ்டாகிராமில் தான் இருப்பதற்கு காரணம் அதில் புகைப்படத்தை பதிவிட்டால் மட்டுமே போதுமானது என்றும், பெரிதாக எதையும் எழுதவும் தேவையில்லை அதனால் குழப்பம் ஏதும் வராது என்றும் கூறியிருந்தார். மேலும் சமூக வலைதளங்களில் தனக்கு அதிக விருப்பமில்லை என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட தோனி பேசும் பொழுது “எனக்கு சமூக வலைதளங்களில் பெரிய விருப்பம் கிடையாது. எனக்கு தனித்தனி மேனேஜர்கள் இருக்கிறார்கள். நான் 2004ஆம் ஆண்டு கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய பொழுது ட்விட்டர் பிரபலமானது. பின்பு இன்ஸ்டாகிராம் வந்தது. என்னுடைய மேனேஜர்கள் சில பிஆர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் நான் அவர்களிடம் நான் நல்ல முறையில் கிரிக்கெட் விளையாடினால் விளம்பரம் தேவையில்லை என்று கூறிவிட்டேன்”
இதையும் படிங்க: 117 பந்து.. 15 ஃபோர் 11 சிக்ஸ்.. ஜெய்ஸ்வாலின் உலக சாதனையை உடைத்த.. தோனி விரும்பிய வீரர்
“உங்களுக்கே தெரியும் கார் போல மோட்டார் சைக்கிள் கிடையாது. நீங்கள் கீழே விழுந்தால் காயம் படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உண்டு. பெரும்பாலும் விளையாட்டு வீரர்கள் தங்களுடைய கை, கால்கள் மூட்டுகள் பற்றி கவலைப்படுவார்கள். இதன் காரணமாகவே நான் சுரேஷ் ரெய்னாவை என்னுடன் மோட்டார் சைக்கிளில் ஏற்ற மாட்டேன். ஏனென்றால் அவர் அமர்ந்து ஒரே மாதிரி வர மாட்டார். அவர் உட்கார்ந்த நிலையில் இருந்து ட்ராக்கில் வளையும் பொழுது நகர ஆரம்பித்து விடுவார். எனவே அவரை வைத்து ஓட்டுவது கடினமானது” என்று கூறியிருக்கிறார்.