இன்று சையத் முஸ்டாக் அலி டி20 தொடரில் பி பிரிவில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் பீகார் அணிக்கு எதிரான போட்டியில் மகாராஷ்டிரா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது இந்திய உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பி எலைட் பிரிவில் இடம் பெற்றுள்ள பீகார் மற்றும் மகாராஷ்டிரா அணிகள் மோதிய போட்டி இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற மகாராஷ்டிரா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டி செய்ய வந்த பீகார் அணிக்கு இளம் தொடக்க ஆட்டக்காரர் 14 வயதான வைபவ் சூரியவன்சி வித்தியாசமான பேட்டிங் அணுகுமுறையை வெளிப்படுத்தினார். பீகார் அணியில் திறமையான வீரர்கள் குறைவு என்பதால், அவர் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து கொஞ்சம் நிதானம் காட்டினார்.
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய அவர் இறுதி வரை ஆட்டம் இழக்காமல் 61 பந்துகள் சந்தித்து விளையாடி ஏழு பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 108 ரன்கள் குவித்தார். 20 ஓவர்கள் முடிவில் பீகார் அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் எடுத்தது. தான் ஒருவன் தான் ஆடியாக வேண்டிய சூழ்நிலையில் சூரியவன்சி காட்டிய பொறுப்பு அனைவரையும் கவர்ந்தது.
இதைத்தொடர்ந்து விளையாடிய மகாராஷ்டிரா அணிக்கு, மும்பை அணியில் இருந்து மாறி வந்திருக்கும் பிரித்வி ஷா 30 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 220 ஸ்டிரைக் ரேட்டில் 66 ரன்கள் குவித்து வலிமையான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இதையும் படிங்க : தோனிக்கு ஒரு நியாயம் விராட்டுக்கு ரோகித்துக்கு ஒரு நியாயமா?.. அகர்கர் தப்பு பண்ணாதீங்க – எம்எஸ்கே பிரசாத் வேண்டுகோள்
இதற்கடுத்து நிரோஜ் ஜோஷி 24 பந்தில் 30 ரன்கள், ரஞ்சித் நிகாம் 16 பந்தில் 27 ரன்கள், நிகில் நாயக் 13 பந்தில் 22 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் மகாராஷ்டிரா அணி 19.1 ஓவர்களில் ஏழு விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பீகார் அணியில் மற்ற வீரர்கள் அதிரடியாக விளையாடாததால் வைபவ் சூரியவன்சியின் சதம் வீணானது.