வந்தாச்சு அடுத்த ஹர்திக் பாண்டியா.. என்னுடைய ரூட் இதுதான்.. கோச் எனக்கு கொடுத்த ஐடியாவுல முடிச்சன் – மாதவ் திவாரி பேச்சு

0
27
Madhav

நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக அறிமுகமான வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் மாதவ் திவாரி அற்புதமாக செயல்பட்டார். இந்த நிலையில் போட்டி குறித்து அவர் பேசியிருக்கிறார்.

தற்போது இந்திய அணிக்கு நம்பிக்கை அளிக்கக்கூடிய வேகப் பந்துவீச்சு ஆல்ரவுண்டர்கள் தேவையாக இருக்கிறார்கள். இந்த நிலையில் மாதவ் திவாரி தற்போது நம்பிக்கை கொடுக்கக் கூடியவராக இருக்கிறார்.

- Advertisement -

சிறப்பான வருகை

நேற்று பஞ்சாப் அணி 210 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில் நான்கு ஓவர்கள் மாதவ் திவாரி 40 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால் இரண்டு முக்கியமான விக்கெட்டுகளை கைப்பற்றி பஞ்சாப் அணியின் ரன் வேகத்திற்கு முட்டுக்கட்டை போட்டார்.

இதைத் தொடர்ந்து இறுதிக் கட்டத்தில் பேட்டிங் செய்ய வந்த அவர் ஒரு சிக்ஸர் மற்றும் இரண்டு பவுண்டரிகள் உடன் எட்டு பந்தில் 18 ரன்கள் எடுத்தார். இது டெல்லி அணி வெற்றி பெறுவதற்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

கோச் சொன்னது இதுதான்

இதுகுறித்து பேசி உள்ள மாதவ் திவாரி கூறும்போது ” எங்களுடைய பேட்டிங் கோச் இயான் பெல் என்னிடம் உனக்கு நல்ல சக்தி இருக்கிறது எனவே நீ வித்தியாசமாக எதையும் செய்ய நினைக்காதே, பந்துக்கு தகுந்தபடி விளையாடு என்று கூறினார். நான் அதைத்தான் செய்தேன். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த அணி நிர்வாகத்திற்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்”

இதையும் படிங்க : இஷான் கிஷான் என்னுடைய இடத்துக்கு தான் குறி வைக்கிறார்.. அந்த உண்மையை என்னால ஒத்துக்க முடியும் – சஞ்சு சாம்சன் பேச்சு

“எங்களுடைய பவுலிங் கோச் முனாப் படேல் சாரிடம் நான் நிறைய பேசினேன். அவரிடமிருந்து நிறைய பந்துவீச்சு ஆலோசனைகளை பெற்றுக் கொண்டேன். இதேபோல பேட்டிங் கோச் இயான் பெல் உடன் இணைந்து சிக்ஸர் அடிப்பதற்கான பயிற்சிகள் நிறைய செய்தேன். இதுதான் எனக்கு போட்டியில் மிகவும் உதவியாக அமைந்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -