இந்திய கிரிக்கெட்

இங்கிலாந்துல கில் செஞ்ச தப்ப.. ஆசிய கோப்பைல சூரியகுமார் செய்யக்கூடாது – மதன்லால் வலியுறுத்தல்

அடுத்து நடைபெற இருக்கும் ஆசியக் கோப்பை தொடரில் இங்கிலாந்தில் கில் செய்த ஒரு தவறை ஆசிய கோப்பையில் கேப்டன் சூரியகுமார் யாதவ் செய்யக்கூடாது என மதன்லால் கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது இந்திய அணி நீண்ட ஓய்வில் இருந்து வருகிறது. இதைத் தொடர்ந்து வருகின்ற செப்டம்பர் ஒன்பதாம் தேதி டி20 கிரிக்கெட் வடிவத்தில் துவங்க இருக்கும் ஆசிய கோப்பை தொடரில் விளையாட இருக்கிறது. பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக விளையாட இருப்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது.

இந்திய அணிக்கான நெருக்கடி

தற்போது இந்திய அணி டி20 கிரிக்கெட் வடிவத்தில் ஆசிய சாம்பியன் ஆகவும் உலக சாம்பியன் ஆகவும் இருந்து வருகிறது. இதன் காரணமாக தற்போது நடைபெற இருக்கும் ஆசிய கோப்பை தொடரை கட்டாயம் வெல்ல வேண்டிய நெருக்கடி இருக்கிறது.

அதே சமயத்தில் தற்போது பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் கூடுதல் வலிமை பெற்றதாக காணப்படுகின்றன. இத்துடன் இலங்கை அணி கணிக்க முடியாத அணியாக இருக்கிறது. மேலும் டி20 கிரிக்கெட் வடிவத்தில் தொடர் நடப்பதால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்பது இந்திய அணிக்கு சிக்கலை அதிகரிக்கிறது.

- Advertisement -

இவருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும்

இதுகுறித்து மதன்லால் பேசும் பொழுது “குல்திப் யாதவ் தனிச்சிறப்பான பந்துவீச்சின் காரணமாக அவரை அணியில் சேர்த்து விளையாட வைக்க வேண்டும். யுஏஇ சூழ்நிலைக்கு அவர் மிகவும் முக்கியமானவராக இருப்பார். மேலும் கட்டாயம் அணியில் இரண்டு சுழல் பந்து வீச்சாளர்கள் இடம்பெற்று இருக்க வேண்டும். இங்கிலாந்தில் அவரை விளையாட வைக்காதது போல செய்யக்கூடாது”

இதையும் படிங்க : ILT20 சீசன 4 தொடருக்கான அட்டவணை வெளியீடு.. முதல் போட்டியே கலக்கல் தான்

“மேலும் ஒரு வீரரை அணியில் சேர்ப்பது இறுதியாக ஆடுகளம் மற்றும் அந்தந்த நேரத்து சூழ்நிலைகள் பொறுத்து மாறுகிறது. தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் பலமாக இருக்கின்றன. பாகிஸ்தான் அணி சிறிய சரிவுக்கு பிறகு வருகிறது. இருந்தபோதிலும் இந்திய அணி உலக சாம்பியன் என்பதால் ஆசிய கோப்பையை வெல்ல வேண்டிய நெருக்கடி ஏற்பட்டு இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by