அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பை தொடருக்கு பிறகு இந்திய டி20 அணியில் இருந்து சூரியகுமார் யாதவை நீக்க வேண்டும் என்ற பேச்சுகள் தவறானவை என, 1983 ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்று இருந்த மதன்லால் கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் பேட்டிங் ஃபார்ம் சுமாராக இருந்து வருகிறது. அவர் கடந்த 20 போட்டிகளுக்கு மேலாக ஒரு அரை சதம் கூட அடிக்காமல் இருந்து வருகிறார். இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததும் அவரை நீக்கிவிட்டு, அந்த இடத்திற்கு ஸ்ரேயாஸ் ஐயரை கொண்டு வர வேண்டும் என கூறி வருகிறார்கள்.
டி20 உலகக் கோப்பையை ஜெயித்தால்…
இதுகுறித்து பேசி உள்ள மதன்லால் கூறும் பொழுது “நீங்கள் சொல்வது என்ன டி20 உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததும் சூரியகுமார் யாதவை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்பது தானே? அவர் இந்த உலகக் கோப்பையை வென்று விட்டால் என்ன செய்வீர்கள்? இப்படியான முன் முடிவுகள் இருக்கக் கூடாது. அவர் சிறப்பாக செயல்படுவார் என்றால் அவர் கேப்டனாகவே மேலும் அணியில் தொடர வேண்டும்”
“மேலும் சூரியகுமார் யாதவ் நான்கு அல்லது ஐந்து ஓவர்களில் போட்டியை ஒட்டுமொத்தமாக உங்களின் பக்கமாக மாற்றிவிடும் திறமையை படைத்த வீரர். நான் ஏற்கனவே சொன்னது போல இந்த வடிவத்தில் ஸ்ட்ரைக் ரேட் என்பதுதான் மிகவும் முக்கியமான ஒன்று”
இப்படியானவர்தான் வேண்டும்
“சூரியகுமார் போன்ற அனுபவம் வாய்ந்தவர்களுக்கு போட்டியை எப்படி வெல்ல வேண்டும் என்பது குறித்து நன்றாகவே தெரியும். நான் தேர்வாளராக இருந்திருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு வீரரை எப்போதும் அணியை நீக்குவது என்பது தவறான முடிவாகவே இருக்கும். அப்படி அவசரப்பட்டு செய்யக்கூடாது”
இதையும் படிங்க : ஆர்சிபிய அடுத்த ஐபிஎல் கண்ட்ரோல் பண்ண முடியாது.. அப்படி ஒரு பிளேயரை வாங்கிட்டாங்க – அஸ்வின் வியப்பு
” சூரியகுமார் யாதவை மக்கள் கேள்விக்கு உள்ளாக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால் இந்த வடிவத்தில் நீங்கள் 10 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தீர்கள் என்றால் கூட, நீங்கள் நல்ல ஃபார்மில் இருக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம். ஏனென்றால் இதில் ஸ்டிரைக் ரேட் என்பது தான் மிகவும் முக்கியமானது” என்று கூறி இருக்கிறார்.






