17 பந்து 50 ரன்..மேட்ச்சை திருப்பிய ஷாருக் கான்.. திரில் போட்டியில் 1 விக்கெட்டில் கோவை சேலம் அணியை வென்றது

0
782

நடப்பு டிஎன்பிஎல் தொடரில் 25வது போட்டியில் லைக்கா கோவை கிங்ஸ் மற்றும் சேலம் ஸ்பார்டான்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் கோவை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் திரில்லர் வெற்றியை ருசித்தது.

இதில் டாஸ் வென்ற கோவை அணி முதலில் பந்து வீச்சினைத் தேர்வு செய்தது. இதனால் பேட்டிங் தொடங்கிய சேலம் அணி முதல் விக்கெட்டுக்கு எட்டு ஓவர்களில் 61 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் விஷால் வைத்யா 33 பந்துகளில் 36 ரன்கள் குவித்தார். அதற்குப் பின்னர் மூன்றாவது ஆட்டக்காரராக களம் இறங்கிய ராஜேந்திரன் விவேக், அதிரடியாக விளையாடி 30 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்கள் என 43 ரன்கள் குவித்து சுப்பிரமணியம் பந்துவீச்சில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

- Advertisement -

பிறகு இறுதியாக மிடில் வரிசையில் களமிறங்கிய ஹரிஷ் குமார் 19 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு இரண்டு பௌண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்கள் என 42 ரன்கள் விளாசி, சேலம் அணி சவாலான ரன்கள் குவிக்க உதவினார். இவரின் அதிரடியால் சேலம் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்தது. பந்து வீச்சில் சிறப்பாக பந்து வீசிய கோவை அணியின் ஜேசுப்பிரமணியம் நான்கு ஓவர்களில் 16 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய கோவை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சுஜாய் அருமையான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தார். தொடக்க ஆட்டக்காரர் சுரேஷ்குமார் 14 ரன்களில் வெளியேற, பின்னர் முகிலேஷ் 14 ரன்களில் வெளியேறினார். சிக்கலில் மாட்டிய கோவை அணியை அணியின் கேப்டன் ஷாருக்கான் சிறப்பாக மீட்டெடுத்தார்.

- Advertisement -

குறிப்பாக இவரது அதிரடியால் ஆட்டத்தின் 15வது ஓவரில் 16 ரன்கள் குவித்த கோவை அணி, 17 வது ஓவரில் 19 ரன்கள் குவித்தது. இதனால் 17 பந்துகளில் ஒரு பவுண்டரி மற்றும் ஆறு சிக்ஸர்களை விளாசி 50 ரன்கள் குவித்தார் ஷாருக்கான். பின்னர் எதிர்பாராத விதமாக பொய்யாமொழியின் பந்துவீச்சில் அவர் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்த நிலையில் கோவை அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 3 ரன்கள் தேவைப்பட்டது.

இதையும் படிங்க:ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டிய இடம் இது கிடையாது.. அவர் அங்க வரணும் – 2007 உலக கோப்பை டீம் இயக்குனர் பேட்டி

கடைசி ஓவரை சேலம் அணியின் சந்து சன்னி வீச, முதல் பந்தில் சித்தார்த்தின் விக்கெட்டை காலி செய்தார். ஒரு விக்கெட் மட்டுமே கையில் இருந்த நிலையில் கோவை அணிக்கு ஐந்து பந்துகளில் மூன்று ரன்கள் தேவைப்பட்டது. அதற்கு அடுத்த மூன்று பந்துகளையும் சந்து டாட் பந்துகளாக வீசினார். கடைசி இரண்டு பந்துகளில் இரண்டு ரன்கள் தேவைப்பட, ஐந்தாவது பந்தில் ஒரு ரன்னும் ஆறாவது பந்தை பவுண்டரிக்கும் விளாசி கோவை அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி திரில்லர் வெற்றியை ருசித்தது.

- Advertisement -