நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் லக்னோ அணி தங்களது சொந்த மைதானத்தில் குஜராத் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது.
இந்த ஐபிஎல் தொடரில் குஜராத் அணி ஐந்து போட்டிகளில் நான்கு வெற்றிகள் எட்டு புள்ளிகள் எடுத்து முதல் இடத்திலும், லக்னோ அணி ஐந்து போட்டிகளில் மூன்று வெற்றிகள் ஆறு புள்ளிகள் உடன் புள்ளி பட்டியலில் ஆறாவது இடத்திலும் இருக்கின்றன.
சாய் சுதர்சனின் அசத்தல்
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற லக்னோ முதலில் பந்து வீசியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணிக்கு கேப்டன் கில் 38 பந்துகளில் 60 ரன்கள், சாய் சுதர்சன் 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார்கள். 20 ஓவர்களில் குஜராத் அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. சர்துல் தாக்கூர் மற்றும் ரவி பிஸ்னாய் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
மேலும் நிக்கோலஸ் பூரன் 288 ரன்கள் எடுத்து ஆரஞ்சு தொப்பியை கைவசம் வைத்திருந்தார். இந்த நிலையில் அரைசதம் அடித்து 329 ரன்கள் உடன் சாய் சுதர்சன் ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார். இந்த நிலையில் உடனுக்குடன் நிக்கோலஸ் பூரன் இதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
மார்க்ரம் – பூரன் அதிரடி
இன்றைய போட்டியில் மிட்சல் மார்ஸ் விளையாடாததால் ரிஷப் பண்ட் துவக்க வீரராக வந்து 18 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஆனால் ஒரு முனையில் மிகச் சிறப்பாக விளையாடிய எய்டன் மார்க்ரம் 31 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 58 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இதையும் படிங்க : கடைசி 10 ஐபிஎல் இன்னிங்ஸ்.. சாய் சுதர்சன் செய்த மாஸ் சம்பவம்.. பூரனை தாண்டி அசத்தல்
இந்த நிலையில் அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் அதிரடியில் மிரட்டினார். மொத்தம் 34 பந்துகளை சந்தித்த அவர் ஒரே ஒரு பவுண்டரி மற்றும் ஏழு சிக்ஸர்கள் உடன் 61 ரன்கள் குவித்தார். மேலும் இதே போட்டியில் சாய் சுதர்சனை தாண்டி ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை மீண்டும் கைப்பற்றினார். முடிவில் லக்னோ அணி ஓவர்களில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.






