நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரில் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி வெற்றி பெற்றது.
வெற்றி அடைந்த விதம் குறித்த லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
லக்னோ அணி வெற்றி
நேற்று ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடித்து விளையாட முடியாமல் தடுமாறியது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு சன்ரைசர்ஸ் அணி 190 ரன்கள் குவித்தது. அந்த அணியைப் பொறுத்தவரை தொடக்க ஆட்டக்காரர் ட்ராவீஸ் ஹெட் அதிகபட்சமாக 28 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். லக்னோ அணித்தரப்பில் சர்துல் தாகூர் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி லக்னோ அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் எய்டன் மார்க்ரம் விரைவாக ஆட்டம் இழந்தாலும், பின்னால் வந்த நிக்கோலஸ் பூரன் மற்றும் மிச்சல் மார்ஸ் ஜோடி ஹைதராபாத் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கியது. சிறப்பாக விளையாடிய பூரன் 26 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு6 பவுண்டரி மற்றும் 6 என 70 ரன்கள் குவித்து லக்னோ அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார். மேலும் தொடக்க ஆட்டக்காரர் மிச்சல் மார்ஸ் 31 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். இந்த சூழ்நிலையில் வெற்றிக்கான காரணம் குறித்து ரிஷப் பண்ட் சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.
ஜாகிர்கான் சொன்ன விஷயம்
இது குறித்து லக்னோ அணியின் கேப்டன் பேசும் போது “ஒரு அணியாக எங்களது செயல்முறையைப் பற்றி பார்க்கும் போது பெரிய நிம்மதியாக உள்ளது. இதில் உள்ள முக்கியமான விஷயம் என்னவென்றால், நீங்கள் வெற்றி பெறும்போது சந்தோஷத்தில் மிகையாக நடந்து கொள்வது பற்றியோ அல்லது தோல்வியடையும் போது தாழ்ந்து போவது பற்றியோ கிடையாது. ஒரு அணியாக நாம் கட்டுப்படுத்த முடியாத விஷயத்தில் கவனம் செலுத்துவதே மிகவும் முக்கியமானதாகும். குறிப்பாக என்னுடைய ஆலோசகர் ஜாகிர் கான் இந்த விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்துமாறு கூறினார். அதைத்தான் நான் இந்த போட்டியில் செயல்படுத்தினேன்.
இதையும் படிங்க:லக்னோ பௌலிங் அபாரம்.. ஆனா எங்க சொந்த விஷயமே நாங்க தோக்க முக்கிய காரணமா மாறிடுச்சு – பேட் கம்மின்ஸ் பேட்டி
இந்த போட்டியில் பிரின்ஸ் பந்து வீசியதை பார்க்கும்போது சிறப்பாக இருந்தது. மேலும் தாகூர் அபாரமாக செயல்பட்டார். பூரன் மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வது பற்றி கேட்கிறீர்கள். அவருக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் நமக்காக நன்றாகவும், அற்புதமாகவும் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது அவருக்கான ஒரு பொறுப்பை கொடுக்க வேண்டும். எங்கள் அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இன்னும் நாங்கள் எங்கள் சிறந்ததை கொடுக்கவில்லை. இருந்தாலும் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று அவர் பேசி இருக்கிறார்.






