“உலக கோப்பையை இழந்தது உடைத்து விட்டது.. ஆஸிக்காக காத்திருக்கிறேன்!” – கில் அதிரடி பேச்சு!

0
2504
Gill

கிரிக்கெட் உலகின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளில் பலராலும் உடைக்க முடியாது என்று கருதிய ஒரு சாதனை, அவர் 1998 ஆம் ஆண்டு ஒரு நாள் கிரிக்கெட்டில் அந்த வருடத்தில் மட்டும் 1800 ரன்கள் அடித்திருந்த சாதனையைத்தான்!

தற்பொழுது சுப்மன் கில் 29 போட்டிகளில் 1584 ரன்கள் இந்த வருடத்தில் மட்டும் குவித்திருக்கிறார். மேலும் உலகக் கோப்பையில் அவர் இரண்டு போட்டிகளில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதில் ஆச்சரிய படத்தக்க இன்னொரு விஷயமாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கில் விளையாடவில்லை. இந்திய கிரிக்கெட் நிர்வாகம் வீரர்களை காயமடையாமல் சோர்வடையாமல் பாதுகாக்க முயற்சி செய்கிறது என்பது தெளிவாகிறது. சாதனைகளைவிட அணியின் பாதுகாப்பே முக்கியம் என்று நினைக்கிறது.

இந்த நிலையில் இந்திய அணியின் எதிர்கால நட்சத்திர வீரராக பார்க்கப்படும் சுப்மன் கில் உலகக் கோப்பை தொடரை இழந்தது குறித்தும், அடுத்து அதிலிருந்து மீண்டு தயாராகி வருவது குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது “இது எனக்கு சிறந்த ஆண்டு என்று நான் நினைக்கிறேன். ஆனால் உலகக் கோப்பையை தவறவிட்டது உடைத்து விட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அடுத்த ஆண்டு ஒரு உலகக் கோப்பை வருகிறது. எனவே நாங்கள் அனைவரும் அதை எதிர்நோக்கி காத்திருக்கிறோம்.

- Advertisement -

அடுத்த வருடத்தில் ஒரு உலகக் கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் தொடர், மேலும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக விளையாட இருக்கும் டெஸ்ட் தொடர் எல்லாம் எங்களுக்கு மிகவும் முக்கியமானது. இந்த போட்டிகளுக்கு நான் ரொம்ப ஆவலாக காத்திருக்கிறேன்.

நான் அடுத்து குஜராத் அணியின் கேப்டனாக பொறுப்பேற்று செயல்பட இருக்கிறேன். இது எனக்கு அடுத்த ஆண்டில் நிறைய கற்றல்களை கொடுக்கப் போகிறது. நான் கற்றுக்கொள்ள இருக்கிறேன். எனக்கு மேலும் என்னை மேம்படுத்திக் கொள்ள இது உதவும்.

நான் தற்பொழுது கடந்த ஆறு ஏழு நாட்களாக ஜிம்மில் இரண்டும் மூன்று மணி நேரங்கள் பயிற்சி செய்து வருகிறேன். இன்னும் ஏழு எட்டு நாட்களில் தென் ஆப்பிரிக்கா டி20 தொடர் துவங்குகிறது. அதற்குள் நான் முழுமையாக தயாராகி விடுவேன்!” என்று கூறியிருக்கிறார்!