5 ரன்னுக்கு 4 விக்கெட்.. கையிலிருந்த போட்டியை கோட்டைவிட்ட டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ்.. லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் வெற்றி

0
551
TSK

அமெரிக்காவில் கடந்த ஆண்டு 6 அணிகளைக் கொண்டு மேஜர் கிரிக்கெட் லீக் என்ற டி20 லீக் நடத்தப்பட்டது. இதில் பங்கேற்கும் 6 அணிகளில் 4 அணிகளை ஐபிஎல் உரிமையாளர்கள் வாங்கி இருந்தார்கள். இந்த நிலையில் இன்று மேஜர் கிரிக்கட் லீக்கிங் இரண்டாவது சீசன் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே துவங்கியது. இந்த போட்டியில் கையில் இருந்த ஆட்டத்தை இழந்து டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பாப் டு பிளேசிஸ் முதலில் தங்கள் அணி பந்து வீசும் என அறிவித்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக வந்த ஜேசன் ராய் 11 பந்தில் 2 ரன், கேப்டன் சுனில் நரைன் 3 பந்தில் 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து ஷாகிப் அல் ஹசன் 13 பந்துகளில் 18 ரன்கள், நிதீஷ் குமார் 17 பந்தில் 26 ரன்கள் எடுத்தார்கள். மூன்றாவது வீரராக வந்த, இந்தியாவுக்காக அண்டர் 19 உலக கோப்பையை வென்று தற்போது அமெரிக்க அணிக்காக விளையாடும் உன்முக்த் சந்த் சிறப்பாக ஒரு முனையில் விளையாடி, 45 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சு தரப்பில் ஜியா உல் ஹக், ஆரோன் ஹார்டி மற்றும் மார்க்கஸ் ஸ்டோய்ஸ் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டன் பாப் டு பிளேசிஸ் 14 பந்துகளில் 14 ரன்கள், ஆரோன் ஹார்டி 14 பந்துகளில் 11 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து விக்கெட் விடாமல் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாகவே வெற்றியை நோக்கி சென்றது.

அந்த அணி 13.1 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 102 ரன்கள் எடுத்து வெற்றிக்கு மிக நெருக்கத்தில் இருந்தது. இந்த நிலையில் டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே 39 பந்துகளில் 53 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து ஜோஸ்வா ட்ரோம்ப், மிலிந்த் குமார் மற்றும் மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் என வரிசையாக வெளியேறினார்கள்.

இதையும் படிங்க : நீ கூட வேலை செய்ற.. எங்களோட அந்த வழக்கம் தெரியாம பேசாத – வாகன் விமர்சனத்திற்கு ரவி சாஸ்திரி பதிலடி

டெக்ஸாஸ் சூப்பர் கிங்ஸ் அணி ஒரு கட்டத்தில் 102 ரன்னுக்கு இரண்டு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இருந்தது. அதற்கு அடுத்து மேற்கொண்டு ஐந்து ரன்கள் மட்டுமே எடுத்து, 107 ரன்னுக்கு 6 ஆறு விக்கெட் என்று, ஐந்து ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. இறுதியாக அந்த அணியால் 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்த அணியின் பந்துவீச்சு தரப்பில் அலிகான் 4 விக்கெட் கைப்பற்றி வெற்றிக்கு காரணமாக இருந்தார்!

- Advertisement -