“இந்திய அணி இந்த முறை உலக கோப்பையை ஜெயிக்காது என்று தோன்றுகிறது!” – தமிழக வீரர் ஆழ்ந்த கவலை!

0
11482
ICT

இந்திய அணி லீக் சுற்றில் ஏழு போட்டிகளில் விளையாடி ஏழு போட்டிகளையும் வென்று மிகவும் வலிமையாகப் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது.

மேலும் அடுத்த இரண்டு போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நெதர்லாந்து அணிகளை கொல்கத்தா மற்றும் பெங்களூர் மைதானங்களில் சந்தித்து விளையாட இருக்கிறது.

- Advertisement -

இந்திய அணி தற்போது விளையாடிக் கொண்டிருக்கும் விதத்தில் புள்ளி பட்டியலில் லீக் சுற்றில் முடிவில் முதலிடத்தை பிடிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக இருந்து வருகிறது.

இந்த நேரத்தில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் காலில் காயமடைந்து வெளியேறினார். காயம் சரியாகாத காரணத்தினால் தற்போது உலகக்கோப்பை தொடரை விட்டு வெளியேறி இருக்கிறார். இது இந்திய அணிக்கு பெரிய பின்னடைவாக இருக்கிறது.

தற்பொழுது இந்த செய்தி வந்ததிலிருந்து இந்திய அணி உலக கோப்பையை கைப்பற்றுமா என்பது குறித்தான எதிர்மறையான கருத்துக்கள் நிறைய சமூக வலைதளங்களில் வெளியாக ஆரம்பித்திருக்கிறது. ஏனென்றால் ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரரே யாரும் கிடையாது. பேட்டிங் வரிசையில் ஏழு வரை மட்டுமே செல்ல முடியும்.

- Advertisement -

இந்த நிலையில் நியூசிலாந்து பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கு தொலைக்காட்சியில் வர்ணனை செய்து வரும் தமிழக வீரர் ஹேமங் பதானி இதுகுறித்த தனது கவலையை வித்தியாசமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “நான் கிரிக்கெட் லாஜிக்படி சொல்லவில்லை. ஆனால் லீக் சுற்றில் மிகச் சிறப்பாக விளையாடும் அணி நாக்அவுட் சுற்றில் உடனே தோல்வி அடைந்து வெளியேறுவதை நிறைய பார்த்து இருக்கிறோம்.

2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் லீக் சுற்றில் எல்லா போட்டிகளையும் வென்று, அடுத்து அரை இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வி அடைந்து வெளியேறி வந்தோம். தற்பொழுது இந்த முறையும் எனக்கு அப்படித்தான் நடக்கும் என்று அதிகமாக தோன்றுகிறது!” இன்று மிகக் கவலையாக கூறியிருக்கிறார்!