“பேப்பரை பார்த்து பார்த்து என்ன செஞ்சிங்க?.. அதுல என்னதான் இருந்தது?..!” – நெதர்லாந்து கேப்டன் மாஸ் இன்ஃபர்மேஷன்!

0
27019
Edwards

பதிமூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி நடப்பு உலக சாம்பியன் இங்கிலாந்தை வீழ்த்தி ஆச்சரியப்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் நேற்று நெதர்லாந்து அணி தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி மேலும் ஆச்சரியத்தை கூட்டி இருக்கிறது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடர் பெரிய அளவில் சுவாரசியத்துக்குள் சென்று இருக்கிறது.

- Advertisement -

நேற்று டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 43 ஓவராக ஆடப்பட்ட போட்டியில் 245 ரன்கள் அடித்தது. அந்த அணியின் கேப்டன் எட்வர்ட்ஸ் 78 ரன்கள் சேர்த்தார்.

தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி நெதர்லாந்து அணியின் ஒழுக்கமான மற்றும் திட்டமிட்ட பந்துவீச்சின் முன்னாள் நிலைக்க முடியாமல் 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

- Advertisement -

இந்தப் போட்டியின் போது நெதர்லாந்து பந்துவீச்சில் ஈடுபட்டிருந்த சமயம், தண்ணீர் கொண்டு வரும் வீரர் ஒரு பேப்பரையும் உள்ளே கொண்டு வந்து, கேப்டனிடம் கொடுத்துக் கொண்டே இருந்தார். அது டக்வார்த் லீவிஸ் விதி ரன்களா இருக்கலாம் என்று ரசிகர்கள் நினைத்தார்கள். ஆனால் அது வேறு ஒன்று என்று ஆச்சரியப்படத்தக்க தகவலை நெதர்லாந்து கேப்டன் கூறியிருக்கிறார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது “நாங்கள் நியாயமாக சில ஆராய்ச்சிகளை செய்கிறோம். நாங்கள் சில மேட்ச்அப்களை கொண்டு வருகிறோம். ஆனால் அது சில நாட்களில் வேலை செய்யும் சில நாட்களில் வேலை செய்யாது. அந்த பேப்பரில் இருந்தது அப்படியான திட்டங்கள்தான்.

கடந்த இரண்டு போட்டிகளில் எங்களுடைய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் கடைசி ஓவர் வரை இருந்து விளையாட முடியவில்லை. இன்று அந்த பொறுப்பை நான் எடுத்துக் கொள்ள நினைத்து விளையாடினேன். இன்று இரவு பார்ப்பதற்கு எங்களுக்கு எல்லாமே நல்லதாக அமைந்திருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!

தற்பொழுது மூன்று போட்டிகளில் இரண்டு போட்டிகளை தோற்ற ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு, நேற்று தென் ஆப்பிரிக்க அணி தோல்வி அடைந்துள்ளது ஒரு பெரிய நிம்மதியை கொடுக்கும் விஷயமாக மாறி இருக்கிறது!

- Advertisement -