இந்தியாவில் நடக்கும் ஆப்கான் நியூசி டெஸ்ட்.. எப்போது எந்த சேனலில் பார்க்கலாம்.?.. முழு விபரம்

0
708

நியூசிலாந்து கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் மகிழ்ச்சிகரமான செய்தியாக அமைந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்த டெஸ்ட் போட்டி நடைபெறும் இடம், தேதி மற்றும் ஒளிபரப்பப்படும் சேனல் உள்ளிட்ட விவரங்கள் தற்போது வெளிவந்துள்ளன.

- Advertisement -

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி தற்போது கிரிக்கெட்டில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பொருளாதார ரீதியாக தற்போது பல்வேறு சிக்கல்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தற்போது சந்தித்து வரும் நிலையிலும் கிரிக்கெட்டில் அந்த அணியின் எழுச்சி மிகவும் அபாரமான முறையில் இருக்கிறது. அந்த அணியில் விளையாடி வரும் ரஷீத் கான், ஓமர்சாய், இப்ராஹிம் சத்ரான் போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்கள் அந்த அணியில் இருக்கின்றனர்.

ரஷித் கான் ஐபிஎல் கிரிக்கெட்டில் நட்சத்திர கிரிக்கெட் வீரராக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆப்கானிஸ்தான் சமீபத்திய ஐசிசி தொடர்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் முக்கிய வெற்றிகளையும் கடந்த டி20 உலக கோப்பையில் அரை இறுதி வரையும் வந்து ஆப்கானிஸ்தான் ரசிகர்களை குஷிப்படுத்தியது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தற்போது நியூசிலாந்து அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக ஒரே டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் விளையாட உள்ள நிலையில் இது நியூசிலாந்து அணிக்கு முக்கியமாக போட்டியாக அமைந்திருக்கிறது. ஏனென்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் நியூசிலாந்து அணி தற்போது மூன்றாவது இடத்தில் இருக்கிறது. எனவே இந்த போட்டியில் வெற்றி பெறுவதன் மூலமாக புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி நல்ல முன்னேற்றத்தை அடையவும் வாய்ப்பு உள்ளது.

இரண்டு அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி வருகிற செப்டம்பர் 9ம் தேதி நாளை இந்தியாவில் கிரேட்டர் நொய்டாவில் நடைபெற உள்ளது. இந்த இரண்டு அணிகள் விளையாடும் போட்டி யுரோப் சார்ட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படுகிறது. மேலும் இணையதளத்தில் பேன் கோடு ஆப் மூலமாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. எனவே இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கும் முக்கிய தொடராக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ள ஆப்கானிஸ்தான் அணி :

ஹஷ்மத்துல்லா ஷாஹிதி (கேப்டன்), இப்ராஹிம் சத்ரான், ரியாஸ் ஹசன், அப்துல் மாலிக், ரஹ்மத் ஷா, பஹீர் ஷா மஹ்பூப், இக்ராம் அலி கில் (வி.கே.), ஷாஹிதுல்லா கமால், அப்சர் ஜசாய் (வி.கே.), அஸ்மத்துல்லா உமர்சாய், ஜியா உர் ரஹ்மான் அக்பர், ஷம்ஸ் உர் ரஹ்மான், கைஸ் அஹ்மத், ஜாஹிர் கான், நிஜாத் மசூத், கலீல் அஹ்மத்.

- Advertisement -